­
08/21/18 - !...Payanam...!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில...

<
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க சென்ற போது என் அண்ணனுக்கு ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததால் இடம் கொடுக்க மாட்டோம் என்றனர். அதனால் அப்பா அப்படி ஒரு பள்ளி தேவை இல்லை என்று சாதரணமான ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் எங்களிடம் பள்ளியை பற்றி எங்களிடம் எதுவும் கேட்கமாட்டார். ஆனால் எங்களுடன் சேர்ந்து விளையாட செய்வார். கேரம் போர்டு மிகவும் அருமையாக ஆடுவார்.எனக்கு தெரிந்து அப்பா இதுவரை தியேட்டருக்கு சென்றதில்லை. preview ஷோவிற்கு தான் செல்வார். அப்படி செல்லும் போது எங்களையும் அழைத்து செல்வார்.அப்பாவிற்கு நான் சாப்பாடு ஊட்டினால் மிகவும் பிடிக்கும். ஐந்து வருடம் நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி இருக்குறேன். மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.அப்பாவிற்கு பிடித்த ஊர் என்றால் திருவாரூர், திருக்குவளை,...

Read More

கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட்...

<
கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அக்குழந்தையை துணை நடிகை கீதா மீட்டார். சுதந்திர தினத்தில் பிறந்தால் சுதந்திரம் என்று பெயரிட்டு, முதலுதவி அளிக்க எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குழந்தை சுதந்திரத்திற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கால்வாயில் இருந்த கிருமிகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தினமும் பால் கொடுக்கப்படுகிறது. குழந்தையைப் பார்க்க அதிக பார்வையாளர்கள் வரத்தொடங்கியதால் யாருக்கும் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய நடிகை கீதாவுக்கு மட்டும்...

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் ...

<
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆயிரகணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, ஏராளமான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. திரைத்துறையினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இத்தகவலை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக உறுதி...

Read More

Search This Blog

Blog Archive

About