July 18, 2019
ஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற ஈஸ்வரி நகர் கிணறு - லியனார்டோ டி காப்ரியோ பதிவால் பிரபலம்
July 18, 2019 சென்னை தண்ணீர் பிரச்சனை தொடர்பான பிபிசி செய்தியை மேற்கோள்காட்டி டைட்டானிக் பட நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தபோது, அதில் காணப்பட்ட சமுதாய கிணறு பிரபலம் அடைந்தது. கடும் தண்ணீர் பிரச்சனைக்கு மத்தியில், இன்றளவும் மக்களுக்கு குறைந்தபட்ச தண்ணீரை வழங்கிக்கொண்டிருக்கும் அந்த கிணறு பல்லாவரத்தில் ஈஸ்வரி நகர் பகுதியில் அமைந்துள்ளது. 1975ல் குடிநீர் கிணறாக சீரமைக்கப்பட்ட இந்த கிணறு, இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. தினமும் மூன்று முறை, ஒரு நபருக்கு மூன்று குடம் என்ற அளவில் தண்ணீர் எடுப்பதற்கு சுமார் 300 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. தினமும் காலை 6 மணிக்கு இந்த கிணற்றை திறக்கிறார் பல்லாவரம் நகராட்சி ஆறாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் முத்து வடிவேல்(55). கடந்த 1989 முதல் இந்த கிணற்றை பராமரித்துவரும் இவர், மக்கள் வழங்கும் தொகையோடு, தன்னால் முடிந்த அளவு பணத்தை சேர்த்து பராமரிப்பு பணிகளை செய்வதாக கூறுகிறார். ''எங்கள்...