February 19, 2018
நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்=பார்க்கத் தகுந்த படம்!
February 19, 2018சினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வ...
சினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வகையில் வந்துள்ள பேய் படமான ‘நாகேஷ் திரையரங்கம்’ கொஞ்சம் புதுசு.. ஆம்.. பாழடைந்த பங்களாக்களில் மட்டுமே கோலோச்சி வந்த பேய் கதையை இதில் ஒரு தியேட்டருக்கு குடி யேற்றியதுடன் தான் பேயாக ஆன காரணம் வழக்கமான காதல், குடும்ப பிரசனை என்று கமிட் ஆகாமல் டாபிக்கலாக கூடவே யூஸ்புல்லான தகவலுடன் கதை சொல்லி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.
உண்மை மட்டுமே பேசும் ரியல் எஸ்டேட் புரோக்கர் நாயகன் ஆரி, அவர் தம்பி அபிலாஷ் படித்து ரொம்ப அதிகமாக சம்பாதிக்கிறார் .. இவர்களின் ஒரே தங்கை வாய் பேச முடியாத அதுல்யா. அதுல்யா-வை கல்யாணம் செய்து கொடுக்க பல லட்சம் தேவை. ஆனால் தம்பியாண்டான் அபிலாஷ் தன்னால் முடியாது என்று கை விரிக்க, ஆரியின் தந்தை இறப்பதற்கு முன் சேர்த்து வைத்துவிட்டு போன ஒரு சொத்து பத்திரத்தைக்காட்டி இதை விற்று, தங்கையின் திருமணத்தை நடத்துமாறு ஆரியின் அம்மா சொல்கிறார்.
இதையடுத்து ஆரியின் பெயரான நாகேஷ் என்ற பெயரில் இருக்கும் பாழடைந்து போன, தியேட்டரை விற்க முயலும் ஆரிக்கு அத் தியேட்டரில் குடியிருக்கும் பேயால் சிக்கல் மேல் சிக்கல் . அதே சமயம் ஆரி லவ் பண்ணி, பாட்டு பாடி ஒரு ட்ராக்கில் போய் கொண்டிருக்கிறார். அதே சமயம் அந்த ஆவியே தோன்றி ஒரு கதை சொல்கிறது. அதாவது
ஆதரவற்ற குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அழகு பொருட்களை தயாரிக்கும் கும்பலை, தமிழ் செல்வி என்ற மாசூம் சங்கர் அவர்களின் ஸ்பாட்டுக்கு போய் ரிக்கார்ட் செய்ததைப் பார்த்து இதே நாகேஷ் திரையரங்கத்தில் வைத்து கொலை செய்து விடுகிறது. அந்த தமிழ் செல்விதான் பேயாக வந்து அதுவும் ஆரியின் உடம்பிலேயே போய் உடகார்ந்து பழி வாங்குவதும் அதன் பின்னர் என்ன என்பதுமே மிச்சக் கதை.
பேய் படம் அதுவும் சமூக அக்கறையுள்ள பேய் படமான இதற்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைத்து கோர்ட்டில் டெபாசிட்டெல்லாம் கட்டி கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். தற்போது சென்னையில் தரை மட்டமாகி கிடக்கும் ‘சஃபையர் திரையரங்கம்’ என்ற டைட்டிலைக் கூட வைத்திருக்கலாம்.. எனி வே எடுத்துக் கொண்ட கதையில் தன்னால் முடிந்த அளவு திறம் பட இயக்கி இருக்கிறார் டைரக்டர் இசாக். ஆனால் எடுத்துக் கொண்ட கதைக்கான ஸ்கிரீன் பிளேயில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நாயகன் ஆரி நாகேஷ் என்ற பெயரில் இருப்பதாலோ என்னவோ பல நேரங்களில் ஆரம்பகால ஆனந்த்பாபு ஸ்டைலில் முக பாவத்தைக் காட்டுகிறார்.. ஆனால் அவரே பேயான பிறகு முகத்தில், உடல் மொழியில் காட்டும் திறமைகள் அற்புதம்.
நாயகி ஆஸ்னா சவேரி-க்கு இப்படத்தில் வந்து போக மட்டுமே வாய்ப்பிருப்பதால் அதை மட்டுமே செய்திருக்கிறார். தங்கையாக வரும் அதுலயா ரவி ரொம்ப பாந்தம்.. காளி வெங்கட், பிரெண்ட் என்ற பெயரில் வந்து படம் முழுவதும் வந்தும் பெயில் மார்க் வாங்கி போகிறார்.
எனினும் அரைப்படம் வரை கொஞ்சம் டல்லாக பயணிக்கும் படம் பேயின் பிளாஷ் பேக்-கிலுள்ள சமூக அக்கறையை சகலரும் புரிந்து கொண்ட பிறகுதான் படமே ஜூடு பிடிக்கிறது. மொத்ததில் வழக்கம் போல் சில குறைப்பாடுகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய போக்கை அம்பலப்படுத்தும் ஸ்பெஷல் பேய் படமான நாகேஷ் திரையரங்கம் – போய் பார்க்கத் தகுந்த படமாக்கும்