January 01, 2019
தமிழ் சினிமா 2018ல் எத்தனை ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? ஆனால் லாபமா!
January 01, 2019<
தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 176 படங்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களில் சில படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது.கடந்த வருடத்தில் சர்கார், 2.0 என பிரம்மாண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. பரியேறும்பெருமாள், 96, ராட்சசன் என சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெற்றது.மொத்தம் இந்த வருடத்தில் ரூ. 2000 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருமானம் ரூ. 1700 கோடி தானாம். ரூ. 300 கோடி நஷ்டமாம்.இந்த நஷ்டம் எல்லாம் சிறு பட தயாரிப்பாளர்களுக்குதானாம். பெரிய படங்கள் எதுவும் பெரியளவில் நஷ்டமடையவில்லை. அவர்களுக்கு சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, டப்பிங் உரிமை என்று எப்படியும் போட்ட பணத்தை நெருக்கி எடுத்துவிடுகிறார்களாம்.இந்த தகவலை எல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய அனுபவம் உள்ள தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இவர் இதற்குமுன்பு தமிழ் சினிமா பற்றிய தகவலை தொகுத்து எழுதிய புத்தகத்திற்காக தேசியவிருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...