­
11/07/17 - !...Payanam...!

ஓர் இரவில் பயணிக்கும், நான்கு கதைகள் ஒன்றையொன்று ஊடுருவிச்சென்று, இறுதியில் ஒரே புள்ளியில் இணையும் இந்த வருடத்தின் மற்றுமொரு ஹைப்பர் லிங்க்...

<
ஓர் இரவில் பயணிக்கும், நான்கு கதைகள் ஒன்றையொன்று ஊடுருவிச்சென்று, இறுதியில் ஒரே புள்ளியில் இணையும் இந்த வருடத்தின் மற்றுமொரு ஹைப்பர் லிங்க் சினிமா `விழித்திரு'.சொந்த ஊருக்குச் செல்லவிருந்த நேரத்தில் பணம் + ரயில் டிக்கெட் வைத்திருந்த பர்ஸை பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் முத்துக்குமாராக கிருஷ்ணா. எல்லாக் காட்சிகளிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். பூட்டிய வீடுகளில் ஆட்டையைப் போடும் திருடன் சந்திரபாபுவாக விதார்த், திருடி சரோஜாதேவியாக தன்ஷிகா. கிருஷ்ணாவின் கதை ரத்தமும் சதையுமாகச் செல்ல, இவர்களின் கதையோ கலாயும் கலாட்டாவாகவும் செல்கிறது. தொலைந்துபோன நாயை தன் மகள் சாராவோடு தேடிக்கொண்டிருக்கும் தந்தையாக வெங்கட்பிரபு. பிறந்த நாளன்று கார் பழுதாகி, பர்ஸை தொலைத்து பையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல் அல்லாடும் கோடீஸ்வர இளைஞனாக ராகுல் பாஸ்கரன். அவரின் தோழியாக எரிக்கா ஃபெர்னான்டஸ். ஒட்டுமொத்த படமும் சோடியம் விளக்கொளியால் சூழப்பட்டிருக்க, கொஞ்சமேனும் கலர்ஃபுல்லாக இருப்பது இவர்களின் கதைதான். பர்சை தொலைத்துவிட்டு...

Read More

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்...

<
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.* ஊஞ்சல்...

Read More

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்...

<
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி...

Read More

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவுக்கு ஓடும்...

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவுக்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது. அங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஒரு சிறிய குழு அமேஸான் மழைக்காடுகளில் நிறையத் தங்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்து அதை எடுக்க உள்ளே சென்றது. சென்றவர்கள் அங்கே விஷத்தன்மையுடன் நீர், மனிதனை விழுங்கும் பாம்புகள், இதெல்லாம் போதாது என வெந்நீர் ஓடும் ஆறு என எல்லாம் இருப்பதாகவும் இதில் அந்த ஆறு அனைவருக்கும் தீப்புண்களை ஏற்படுத்துவதாகவும் பீதியுடன் கூறியுள்ளனர்.அதே பெரு நாட்டைச் சேர்ந்த புவி விஞ்ஞானி ஆண்ட்ரெஸ் ரூஸோ (Andrés Ruzo) சிறு வயதிலிருந்தே இவ்வகை கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.“அமேஸான் காடுகளின் அடர்ந்த பகுதியில் ஒரு நதி இருக்கிறது. அதன் அடியில் ஏதோ பெரிய அடுப்பு இருப்பதைப் போல...

Read More

மோகன் லால் - உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியிருக்கும் சினிமா `வில்லன்'. `கிராண்ட் மாஸ்டர்' போன்ற வடிவமைப்பிலே...

மோகன் லால் - உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியிருக்கும் சினிமா `வில்லன்'. `கிராண்ட் மாஸ்டர்' போன்ற வடிவமைப்பிலேயே இன்னொரு த்ரில்லர் கதை சொல்லியிருக்கிறது இந்த காம்போ. ஏழு மாத விடுப்புக்குப் பின் மீண்டும் வேலைக்கு வருகிறார் மேத்திவ் மஞ்சூரன் (மோகன் லால்). வந்த கையோடு விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு அன்றோடு காவல்துறையிலிருந்து விலக இருப்பவரிடம், நகரத்தில் மூவரை மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. முதலில் அதனை ஏற்க மறுப்பவர் பின்பு, தீவிரமாக அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்தக் கொலைகளை செய்தது யார். ஏன், எப்படி என வில்லனுக்காக போலீஸ் மோகன் லால் மேற்கொள்ளும் தேடுதலே படம். ஆரம்பத்திலேயே கொலை நடந்ததைக் காண்பித்து கதைக்குள் நுழைகிறது படம். கொலையாளி விஷால்தான் எனக் காட்டிவிட்டு, இந்தக் கொலை எப்படி நடந்திருக்கும் என மோகன் லால் க்ளூக்களை இணைத்து சொல்லும் விதத்தால், அடுத்து...

Read More

நவம்பர் 7-ம் தேதி வந்துவிட்டால் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்துவிடும். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கமலின் அரசியல் பிரவேசம் கு...

<
நவம்பர் 7-ம் தேதி வந்துவிட்டால் கமல் பிறந்தநாள் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்துவிடும். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கமலின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டு எகிறிவருகிறது. தமிழ்சினிமாவின் தரத்தை உலக சினிமா உயரத்துக்குக் கொண்டுசென்ற கமலை 'உலக நாயகன்' என்று சொல்வது சாலப்பொருத்தமானது. இந்திய சினிமா உலகில் கமல் புகுத்தியுள்ள நவீன தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் இங்கே...1986-ம் ஆண்டிலேயே ஏவுகணை குறித்த கதையை எழுத்தாளர் சுஜாதாவிடம் பெற்று அதை திரைக்கதையாக 'விக்ரம்' படத்தில் அமைத்திருந்தார், கமல். ராஜ்கமல் தயாரித்த 'விக்ரம்' படத்தில்தான் கமல் சொந்தக் குரலில் பாடிய  'விக்ரம்... விக்ரம்...' பாடலின் இசையில் முதன்முதலாக  கம்யூட்டரில் கம்போஸ் செய்தார், இளையராஜா. அதன்பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து 'ரோஜா' படத்தின் பாடல்களைக் கம்யூட்டரில் கம்போஸ் செய்தார், ஏ.ஆர்.ரஹ்மான். 1989- ம் ஆண்டு வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்துக்கு வயது 28 ஆண்டுகள். ஆனால், இப்போதும்கூட கமல் அப்பு...

Read More

ரஜினியின் 2.0 படம் படு பிரம்மாண்டமாக 3Dயில் தயாராகி வருகிறது. படத்தின் மொத்த ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் தான் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்தத...

ரஜினியின் 2.0 படம் படு பிரம்மாண்டமாக 3Dயில் தயாராகி வருகிறது. படத்தின் மொத்த ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் தான் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்தது.இப்படத்தில் ஒருவித வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு மொத்தம் 12 கெட்டப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ரஜினி சிட்டி, வசீகரன் என்று இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்.தற்போது 2.0 படத்தில் அக்ஷய் குமாருக்கு 12 கெட்டப் என்ற தகவல் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் படத்திற்காக தயாரான பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவிட்டது. ...

Read More

கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்கள...

<
கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் Maiam Whistle என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளை அந்த ஆப்பில் கூறுலாம்.இவரின் இந்த புதிய முடிவு முதல்வன் படத்தில் இடம்பெற்ற புகார் பெட்டியை நினைவுப்படுத்துகிறது. இரண்டு விஷயங்களும் மக்களுக்காக உதவும் வகையில் இருப்பதுதான்.Maiam ஆப் எப்படி செயல்பட போகிறது, மக்கள் தங்களது பிரச்சனையை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ...

Read More

வீர தமிழச்சி என்ற பெருமையான பெயரோடு BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பெயர் எப்பட...

<
வீர தமிழச்சி என்ற பெருமையான பெயரோடு BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பெயர் எப்படி பேசப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மொத்தம் 3 மாதங்கள் ஒளிபரப்பாக கூடிய இந்நிகழ்ச்சியில் பணிபுரிய ஜுலிக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.கொஞ்சம் வளர்ச்சியை கண்டிருக்கும் ஜுலி அதிகமாக பேசாமல் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்தாலே அவர் மேல் உள்ள வெறுப்புகள் மறையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ...

Read More

நடிகர் கமல் ஹாசன் தன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தனார். மக்கள் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் ...

<
நடிகர் கமல் ஹாசன் தன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தனார். மக்கள் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மக்கள் தங்கள் குறைகளை இந்த செயலியில் பதிவு செய்யலாம் என அவர் கூறினார். இதற்காக அவர் #maiamwhistle #theditheerpomvaa #virtuouscycles என மூன்று ஹேஸ் டேக்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். இது வரும் ஜனவரி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.தற்போது இந்த ஆப் கடந்தாண்டு கேரளா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விசில் நவ் என்ற செயலியின் மாதிரியை போல உள்ளது என சொல்கிறார்கள். ஏற்கனவே கமலுக்கு கேரளா முதலமைச்சர் ஆதரவு தெரிவித்த நிலையில் அவர் அங்குள்ள பாணியை பின் பற்றுகிறார் என சொல்கிறார்கள். ...

Read More

Search This Blog

Blog Archive

About