October 28, 2016
தனுஷின் முதல் முறை இரட்டை வேடம் இதற்குத்தானா? - 'கொடி' விமர்சனம்
October 28, 2016 அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி. இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல். மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம் தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன...