June 03, 2019
தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்!
June 03, 2019<
ஒரு பழமொழி சொல்லுவாங்களே.. "தேரை இழுத்து தெருவில் விட்டவன் திருவிழா கூட்டத்தில் தொலைந்தே போனானாம்! இப்படித்தான் கமலை பற்றி மற்ற அரசியல் கட்சியினர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.சினிமாவில் நடித்து கொண்டிருந்தவர் திடீரென ட்விட்டருக்குள் வந்தார். பிறகு அதிமுகவை சரமாரியாக வெளுத்தார். வெறும் ட்விட்டர் அரசியல்தான் கமலுக்கு லாயக்கு, களத்தில் இறங்க தயங்குபவர் என்று சரமாரி விமர்சனங்கள் வந்தன.ஆனால் கொஞ்ச நாளிலேயே கட்சியை ஆரம்பித்தார். புதைந்துபோன கிராம சபை உள்ளிட்ட விஷயங்களை வெளியே கொண்டு வந்தார். கட்சியை விரிவுபடுத்தினார், இளைஞர்கள் இவரது அரசியலில் மயங்கினார்கள்.. பின் தொடரவும் ஆரம்பித்தார்கள்!அரசியல்வாதி கமல்பொதுவாழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர் திடீரென விஜய் டிவிக்குள் நுழைந்து ‘பிக்பாஸ் சீசன் 2' சீசனில் கலந்து கொண்டார். டிஆர்பி ரேட் நாளுக்கு நாள் எகிற, மாபெரும் வெற்றி பெற்றது நிகழ்ச்சி! அந்த சமயத்தில் அரசியல்வாதி கமல் காணாமல் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கான அரசியல் களமாக அவ்வப்போது ஆக்கி கொண்டாலும், நேரடி...