October 20, 2016
இளையராஜா, ரஹ்மானை விட உயர்ந்தது இது!
October 20, 2016<
இணையத்தை திறந்தால் இளையராஜா தான் மாஸ் என்று ஒரு குழுவும், ரஹ்மான் தான் டாப் என்று ஒரு குழுவும் பேசிக்கொண்டிருக்கும். இவர்கள் இல்லாமல் நமக்குத் தெரிந்த இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவங்க எல்லோரையும் விட பெஸ்ட் இருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் "யெஸ்" ங்கிறது தான் பதிலாக இருக்கும். அது யாரா இருக்கும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்! வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளைக் கூட இசையால் ரொம்ப எளிமையா சொல்லிவிடுவார் ராஜா.. காதலி பிரிந்து செல்லும் துயரமாகட்டும், காதல் பூக்கும் தருணமாகட்டும் கண்களை மூடிக்கொண்டு கேட்டாலும் காட்சி மனதுக்குள் ஓடும் வித்தையை இவர் இசை செய்யும், சரி.. காதலுக்கு மட்டும்தானா என்றால் கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். சோர்ந்து, ஒதுங்கி வாழும் ஒருவன் வீறு கொண்டு எழுவதை இந்த பி.ஜி.எம் எப்படி உணர்த்துகிறது என்று கேளுங்கள். பிரெஞ்சு நாட்டு இசை மேதை எட்கர்ட் வர்ஸ் என்பவர்...