­
06/19/17 - !...Payanam...!

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்கள், புதிதாக சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஒரு சின்ன பட்ஜெட் படம், கதையின் மீ...

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்கள், புதிதாக சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஒரு சின்ன பட்ஜெட் படம், கதையின் மீது நம்பிக்கை என கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்று பலர் கலக்கி வரும் நம்பிக்கையில், பீச்சாங்கை மூலம் களம் இறங்கியுள்ளார் இயக்குனர் அசோக். இவரும் நம்பிக்கையானவர்கள் லிஸ்டில் இணைந்தாரா பார்ப்போம். கதைக்களம் கதாநாயகன் கார்த்திக் ஒரு பிக் பாக்கெட், தன் பீச்சாங்கையால் பல பர்ஸுகளை பிக் பாக்கெட் அடித்தாலும், பணத்தை தவிர மற்றதை அவர்கள் அட்ரஸுக்கே அனுப்பி வைக்கும் நல்ல பிக் பாக்கெட் என்று சொல்லலாம். அப்படி ஒரு கட்டத்தில் தன் நண்பர் அடித்து வந்த பணத்தை பங்கு பிரிக்கும் போது இது ஒரு முதியவர் தன் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணம் என தெரிய வர, அதை அந்த முதியவரிடமே ஒப்படைக்க செல்கின்றார். அங்கு ஹீரோயின் அஞ்சலி ராவ்வை பார்த்ததும் காதல் ஏற்பட...

Read More

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவரின் படங்கள் தொடர்ந்து காமெடி, காதல் என்ற ஒரே வட்டத்திற்குள் மட்டு...

சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவரின் படங்கள் தொடர்ந்து காமெடி, காதல் என்ற ஒரே வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது. எதிர் நீச்சல் மட்டுமே கொஞ்சம் வித்தியாசமாக நடித்திருந்தார், இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் சமூக அக்கறை கொண்ட இளைஞனாக நடித்து வருகின்றார். இதில் உணவை வைத்து நடக்கும் அரசியல் பேசும் கதையாம், மேலும், நூடல்ஸ் என்ற உணவின் தீங்கு குறித்தும், அதில் நடக்கும் அரசியல் குறித்தும் தீவிரமாக இப்படம் பேசும் என கிசுகிசுக்கப்படுகின்றது. ...

Read More

பிரபல நடிகர்கள் அவர்களின் பழைய படங்களில் பெண் வேடம் போட்டு நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கமல், ரஜினி, விக்ரம், விஜய், பிரசா...

பிரபல நடிகர்கள் அவர்களின் பழைய படங்களில் பெண் வேடம் போட்டு நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கமல், ரஜினி, விக்ரம், விஜய், பிரசாந்த் என பலர் பெண் வேடம் போட்டு நடித்துள்ளனர். அவர்களை பார்த்தால் நம்மால் கண்டிப்பாக அடையாளம் காண முடியும். ஆனால் தற்போது பிரபல நடிகரின் பெண் வேட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது வேறு யாரும் இல்லை துருவங்கள் 16 என்ற ஹிட் படத்தில் நடித்த ரகுமானின் புகைப்படம் தான். 1984ம் ஆண்டு வெளியான இத்திரி பூவே சுவன்னபூவே மலையாள படத்தில் ரஹ்மான் பெண் வேடம் போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பெண் வேடம் போட்டது போல் இல்லை, நிஜமாகவே பெண் போன்று அழகாக இருக்கிறார் என்று தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ...

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி இல்லாத தொலைக்காட்சி சேனல்களே இல்லை எனலாம். மிகபிசியாக இருந்த இவர் ...

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி இல்லாத தொலைக்காட்சி சேனல்களே இல்லை எனலாம். மிகபிசியாக இருந்த இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்து சரியான படம் அமையாமல் காத்திருக்கிறார். இவர் தற்போது மிகவும் நம்பியிருப்பது விஜய்61 தான். ப்ரண்ட்ஸ், சச்சின், போக்கிரி என வெற்றிகூட்டணியாக வலம் வந்த இவர்கள் கடைசியாக இணைந்து நடித்த படம் காவலன். விஜய்61 பற்றி வடிவேலு கூறுகையில், ‘விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே. நம்ம காமடியைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க. ‘நீங்க விட்டுட்டுபோன இடம் அப்படியேதாண்ணே இருக்கு. அதைத்தொட உங்களாலதாண்ணே முடியும். அதுல நீங்கதாண்ணே வரணும், போகணும்’னு இரண்டு பேரும் என் காமெடியைச் சொல்லி பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அது பெரிய ஊக்கமா இருக்குண்ணே. கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தேண்ணே. ஒரு மாசம் முடிஞ்சுடுச்சு என்றார். விஜய் 61ல் ஆக்ஷனோடு வடிவேலு கூட்டணியில் ரசிகர்களுக்கு காமெடி...

Read More

டிகாஷன் காபிக்கு ஆசைப்படும் நாக்குக்கு “ஹேய்… இது ‘ப்ரூ’ டா!?” என்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும் கிச்சன் கேபினெட் போல, ஹேய...

டிகாஷன் காபிக்கு ஆசைப்படும் நாக்குக்கு “ஹேய்… இது ‘ப்ரூ’ டா!?” என்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும் கிச்சன் கேபினெட் போல, ஹேய் இது ‘உரு’டா என்று நம்மை உருள விடுகிறது படம்! வாழுகிற காலத்திலேயே பெரிய கட்டுரை ஒன்று பாராவாக தேய்ந்து… அந்த பாராவும் பின்பு வரியாக சுருங்கி, கடைசியில் ஒரு எழுத்துக்குள் அடங்கிவிடுகிற அளவுக்கு உளுத்துப் போகிறார் எழுத்தாளர் கலையரசன். “உங்க கதைக்கெல்லாம் முன்ன மாதிரி வாசகர்கள்ட்ட ஒரு மரியாதையும் இல்ல. போய் நல்ல கதையா எழுதிட்டு வாங்க” என்று பிடறியை பிடித்து தள்ளாத குறையாக அனுப்பும் பதிப்பக உரிமையாளருக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் ஒரு கதை பண்ண பிரியப்படும் மிஸ்டர் எழுத்தாளர், கொடைக்கானலுக்கு கிளம்புகிறார். ஏன்? கதை எளுதறதுக்குத்தான்! அவரது இளம் மனைவி தன்ஷிகா, “ஏங்க… கொஞ்ச நாள் வரைக்கும்தான் உங்களுக்கு டைம். நல்ல நிலைக்கு வரலேன்னா எழுதறத விட்டுத் தொலைச்சுட்டு வேற வேலைய பாருங்க”...

Read More

நிழலை பார்த்தாலே மருண்டு நிற்கும் குழந்தைகள் கூட, இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் குஷாலாக தியேட்டருக்கு கிளம்பிவிடுகிறார்கள்! ‘இங்கு குற...

<
நிழலை பார்த்தாலே மருண்டு நிற்கும் குழந்தைகள் கூட, இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் குஷாலாக தியேட்டருக்கு கிளம்பிவிடுகிறார்கள்! ‘இங்கு குறைந்த விலையில் வேப்பிலை அடிக்கப்படும். ஒரு பேயை கூட்டி வந்தால் இன்னொரு பேய்க்கு இலவச வைத்தியம்’ என்று போர்டு போடாத குறையாக தொழில் டல்லாகி கிடக்கிறார்கள் பேய் ஓட்டுகிற பூசாரிகள். இவ்வளவுக்கும் காரணம்… இந்த பேய்ப்பட இயக்குனர்கள்தான். “பயப்படாத… நம்ம பயதான். நாலு நாளைக்கு முன்னாடி செத்து இன்னைக்கு பேயா வந்திருக்கான். நல்லா சிரிப்பான். நல்லா சிரிப்பு மூட்டுவான்” என்று சின்ன குழந்தைகளிடமிருந்த பேய் பயத்தையெல்லாம் உடைத்து சிதைத்துவிட்டார்கள். அதிலும் சமீபத்தில் வந்த ‘மரகத நாணயம்’ படத்திற்கு நாடு முழுக்க பலத்த அப்ளாஸ். குறிப்பாக குட்டீஸ்களின் ஏரியாவில் ஒரே குதூகலம்! இப்படி சுடுகாட்டு சாம்பலில் சுரைக்காய் புட்டு செஞ்சு அதையும் கப்புல போட்டு கனக் கச்சிதமா யாவாரம் பண்ணிய ‘மரகத நாணயம்’ படத் தயாரிப்பாளர் டில்லிபாபுவுக்கும், அப்படத்தை இயக்கிய...

Read More

Search This Blog

Blog Archive

About