December 02, 2016
சைத்தான் -விமர்சனம்
December 02, 2016மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தா...
மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்! ஆவி, பிசாசு, பில்லி, சூனியம் என்று ஆர்டினரி தோசை சுடாமல், மெடிக்கல்…
முற்பிறவி என்று ஹைடெக் பீட்சா சுட்டிருக்கிறார்கள். மொத்த மாவில் பாதி எழுத்தாளர் சுஜாதாவுக்கு சொந்தமானது. அவரது ‘ஆ’ என்கிற நாவல்தான் சைத்தான் பட ஃபார்முலா! மிச்ச மீதி கற்பனை படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியுடையது.
அவ்ளோ பெரிய ஐடி நிறுவனத்தில், கஷ்டமான கம்ப்யூட்டர் புரோகிராம் கோளாறுகளை கூட சர்வ சாதாரணமாக சரி பண்ணிவிடும் விஜய் ஆன்ட்டனிக்கு, முதலிரவு அன்றுதான் அரைகுறை இரவே ஆரம்பிக்கிறது. மண்டைக்குள்ளிருந்து ஒரு குரல் கிளம்பி, “செத்துப் போ” என்கிறது அடிக்கடி! மனைவியிடம் காட்டிக் கொள்ளாமல் மறைக்கும் விஜய் ஆன்ட்டனி, விதவிதமான டிசைன்களில் தொல்லையை அனுபவிக்க… அவரே தன் நண்பனின் சாவுக்கும் காரணம் ஆகிறார். குற்றவுணர்ச்சியில் தவிக்கும் அவரை, மனோதத்துவ மருத்துவரான கிட்டியிடம் கூட்டிச் சொல்கிறார் ஐடி முதலாளி.
அவரை ஹிப்னாட்டிச நிலைக்கு கொண்டு செல்லும் மருத்துவர், ‘அதுக்கு முன்னே அதுக்கும் முன்னே’ என்று விஜய் ஆன்ட்டனியை முற்பிறவிக்கே கொண்டு போய்விடுகிறார். அங்குதான் ட்விஸ்ட்! மண்டைக்குள்ளிருந்து அவரை அழைத்துக் கொண்டேயிருக்கும் அந்த குரலும், அவருக்கான பணியும் இந்த அப்பாவி ஐடி இளைஞனை தஞ்சாவூருக்கு கொண்டு போகிறது. போன இடத்தில் நடக்கும் படுபயங்கர பிளாஷ்பேக்கும், அந்த பிளாஷ்பேக்குக்கும் புது மனைவிக்கும் நடுவே இருக்கிற கனெக்ஷனும் என்னவாக மாற்றுகிறது விஜய் ஆன்ட்டனியை? க்ளைமாக்ஸ்!
முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லப்பட வேண்டும் என்கிற அக்கறைக்கு முதல் சபாஷ். கடைசி காட்சி வரை, வேறெந்த கவன சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் நூல் பிடித்த மாதிரி கதையை நகர்த்திச் செல்லும் கடமையுணர்ச்சிக்கும் ஒரு பலே! (இருந்தாலும் கொஞ்சம் ரிலாக்சேஷனுக்கு வழி இருந்திருக்கலாமோ?)
விஜய் ஆன்ட்டனி தனது பாடி லாங்குவேஜுக்கும் சற்றே இறுகிய முகத்திற்கும் தோதான கதைகளை பிடிப்பதில் கெட்டிக்காரர். சைத்தானும் அப்படியே! கண்ணை மூடி முற்பிறவிக்கு போய், சடக்கென தூக்கிவாரிப் போடும் அவசரத்தோடு மீள்கிற நிமிஷங்களில் பதற விடுகிறார் ஆன்ட்டனி. ஒருகட்டத்தில் இப்படியாவதற்கு காரணமே தன் மனைவிதான் என்பதை அறிந்த பின்பும், அவரை நேசிக்கிற பக்குவம் விஜய் ஆன்ட்டனிக்கு மக்கள் மத்தியிலிருக்கும் ‘நல்ல ஹீரோ’ இமேஜுக்கு வர்ணமடிக்கிறது. பிற்பாதியில் ஒரு வெயிட்டான பைட்டும் இருக்கிறது அவருக்கு. கம்போஸ் செய்த சரவணனுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ். பிளாஷ்பேக்கில் வரும் விஜய் ஆன்ட்டனி, அங்கும் மனைவி மீது காதல் வழியும் நல்ல புருஷனாக இருப்பதால், அந்த கொலை பதற விடுகிறது தியேட்டரை.
ஜெயலட்சுமி ஜெயலெட்சுமி என்று விஜய் ஆன்ட்டனி அவரை தேடிக் கொண்டே போக, அந்த பாழடைந்த வீட்டில் கிடைக்கும் அந்த போட்டோ, பகீர். க்ளைமாக்சில் அதே போட்டோவை வைத்து மீண்டும் ட்விஸ்ட் அடித்த விதத்தில், கவனிக்க விடுகிறார் டைரக்டர் பிரதீப்.
கட்டிய மனைவி, கள்ளக்காதலி என்று டபுள் கனத்தை தலையில் சுமந்திருக்கிறார் அருந்ததி நாயர். தள தள தக்காளிக்கு தழைய தழைய புடவை கட்டிய அழகுடன் இருக்கிறார். இவரது புது மனைவி கொஞ்சலுக்கு நிச்சயம் புல்லரிக்கும் ரசிக மனசு! எப்படியோ… கதையில் இவரைப்பற்றிய கணக்கு பிணக்கு தப்பாக இருந்தாலும், பேலன்ஸ் பண்ணுகிறது அந்த செகன்ட் ஹாஃப்!
ஐடி இளைஞன் என்று சொல்லியாகிவிட்டது. இவருக்கு பிரண்ட் என்று ஒருவரை போடும்போது சற்றே கவனம் வேண்டாமா? ஆடுகளம் முருகதாஸ்தான் அவர் என்கிறபோது கெக்கேபிக்கே ஆகிறது தியேட்டர். அவர் பேசும் இங்கிலீஷ் இன்னும் கொடுமை.
நல்லவேளையாக கிட்டி, ஒய்ஜிமகேந்திரன், சற்றே திகில் கிளப்பும் பார்வையுடன் விதவித கெட்டப்புகளில் வந்து போகும் அந்த ஷார்ட் பாய் என்று அனைவரும் கச்சிதம்!
இந்தப்படத்தின் பாதி மிரட்டலான கதையிலும், பாத்திரப்படைப்பிலும் இருக்கிறது என்றால், மிச்சத்தை நிரப்ப வேண்டிய பெரும் பொறுப்பு பின்னணி இசைக்கு இருக்கிறது. அதை உணர்ந்து மிரட்டியிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. பாடல்கள் மட்டும் என்னவாம்? அத்தனை பாடல்களும் மிரட்டல். இனிமை. ஒவ்வொரு பிரேமையும் திகிலில் நனைத்து பயங்கரத்தில் மிதக்க விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத்.
முற்பிறவி என்கிற விஷயத்தையே இன்னும் நீட்டி கதையை முடித்திருக்கலாமோ என்கிற எண்ணத்தை உருவாக்குகிறது அந்த மெடிக்கல் க்ரைம் பகுதி. அதில் வரும் வில்லன்களும் டிபிக்கல் தமிழ்சினிமாவை பிரதிபலிக்கிறார்கள். எப்படியோ… அவர்கள் புண்ணியத்தில் ஒரு மிரட்டல் பைட் கிடைத்திருப்பதால் மன்னிச்சூ!
பிச்சைக்காரன் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு போன விஜய் ஆன்ட்டனியின் ரசிகர்களுக்கு இந்த சைத்தான், கொஞ்சம் shy-த்தான்!