October 08, 2016
ரெமோ- ஹரி படங்களில் வருகிற சுமோ மாதிரி ச்சும்மா விர்…..ர்!
October 08, 2016 நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை!” சத்யம் தியேட்டர் வாசலில் பிரமாண்டமான ஒரு பேனர்ல முகம் வருகிற அளவுக்கு வளரணும் என்கிற லட்சியத்தோடு திரியும் ஒரு அப்ரசண்டு நடிகனுக்கு, வாழ்க்கை கொடுக்கிற ஒரு வாய்ப்பு, ‘நாள் முழுக்க பொம்பளப் புள்ளையா திரிப்பா…’ என்பதுதான்! அதுவும் லட்டு மாதிரி சிட்டுக்காக என்றால்? ஆளே வழவழப்பாகி கீர்த்திசுரேஷ் பின்னால் சுற்ற ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன் தன் வேஷம் கலைத்தது எப்போது? கலைந்தபின் அவருக்கு கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன? இதுதான் ரெமோ. படத்தில் முக்கால்வாசி நேரம் சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் ‘ஸ்த்ரீ பார்ட்’ வேஷம்தான் ஏழெட்டு...