October 26, 2016
‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்... அவ்வளவுதான். வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்... ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை... வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்! ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா...? கோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்”...
October 26, 2016
சொழலி, கலகி, அழலி, எறலி - அர்த்தம் சொல்கிறார் பாடலாசிரியர் விவேக்!
October 26, 2016இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல் பேய் ஹி...
<
இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல் பேய் ஹிட். சொழலி, கலகி, அழலி, எறலி... என்ன இது வார்த்தைகளே வினோதமா இருக்கே என பாடலாசிரியர் விவேக்கை அலைபேசியில் அழைத்தோம். ”பாட்டு வெளியானதிலிருந்து நிறைய பேர் கேட்டுட்டாங்க, "சுழலினா என்ன அர்த்தம்?"னு. ஏமாத்துக்காரினு அர்த்தம், சுழற்றி அடிப்பவளேனு கூட எடுத்துக்கலாம். நீங்க பாட்டு வர்ற சூழலோட பார்க்கும் போது ஏன் இந்த வார்த்தைனு புரியும். படம் வர்றதுக்கு முன்னாலயே பாட்டு பெரிய ரீச் ஆனதில் பெரிய சந்தோஷம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், வார்த்தைகள் தெளிவா தெரியும் படி பாடின விஜய் நரேனுக்கும் நன்றிகள்.” "பாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் நிறைய கரெக்ஷன் போட்டிருக்கார் போல?" இந்தப் பாட்டு எழுத எனக்கு ஒரு அரை மணிநேரம் ஆச்சு. ஐபாட்ல எழுதி சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி...
October 26, 2016
இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் + டின்களில் அடைத்து விற்கப்படும் குலாப்ஜாமூன்களை அவாய்ட் பண்ணுங்க!
October 26, 2016தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்க...
<
தெரியாதவங்க கூட கடைகள்ல விக்கிற இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செஞ்சுடறாங்க.. இதுக்கும் சோம்பேறித்தனமா இருக்கறவங்க டின்களில் அடைக்கப்பட்ட குலாப்ஜாமூன்களை வாங்கி பயன்படுத்தறாங்க. இப்பல்லாம் யூடியூப் ல நிறைய பலகாரங்கள் செய்யறது பற்றியான தகவல்கள் வீடியோ காட்சிகளாவே கிடைக்குது. அதப்பார்த்தும் நிறைபேரு விதவிதமா ட்ரை பண்றாங்க.. இந்த ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் பல பிராண்டுகள்ல கிடைக்குது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீன்னு பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொடுத்துகிட்டு இருக்கு. இந்த பாக்கெட்டுகளைப் பொறுத்தவரை அதுல இருக்கிற அந்த கோவா மிக்ஸ் என்பது ஒரு கெமிக்கல் கலந்த பிரசர்வ்வேட்டிவ் ஃபுட் மிக்ஸ்தான். பால் பொருட்கள் எதுவா இருந்தாலும் அது ஒரு நாள் ரெண்டு நாளுக்கு மேல தாங்காது. கோவாவும் அப்படித்தான். பாலிலிருந்து எடுக்கும் கோவா 2ம்நாள் புளிச்சுப்போயிடும். ஆனால் இந்த ரெடிமேடு மிக்ஸ் எனப்படும் குலாப்ஜாமூன் மிக்ஸ் 3 முதல் 6 மாதம் வரை கூட கெடாமல் இருக்கின்றது....
October 26, 2016
வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?
October 26, 2016தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்...
<
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின் அமைப்புகள். பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் இன்று அதற்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார். அதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும் ஆமோதித்திருக்கிறார். சுப்ரமணியன் பேசிய பல விஷயங்களில் மிக முக்கியமான விஷயம் ஒன்றுதான் கிடுக்கிப்பிடி! “இன்று படம் திரைக்கு வந்த நான்கு நாட்களுக்குள்ளேயே இந்தப்படம் இமாலய வெற்றி, ஆரவாரமான வெற்றின்னு விளம்பரம் கொடுத்து உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க. உண்மையில் அப்படியா இருக்கு நிலைமை? நீங்கள் விளம்பரம் கொடுப்பதுதான்...
October 26, 2016
தமிழனின் புகழை அழிக்கும் முயற்சி! ஹ்ம்… தமிழனின் குரல் எப்போது டெல்லி வரைக்கும் கேட்டிருக்கிறது, இப்போது கேட்க?
October 26, 2016சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாக...
<
சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாகரீத்தின் உச்சத்தில் வாழ்ந்திருக்கிறான் தமிழன் என்பதற்கான ஆதாரங்கள் அந்த கீழடி கிராமத்தில் கிடைத்திருக்கிறது. பண்டைய தமிழன் பயன்படுத்திய அற்புதமான பொருட்களும் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாகரீகத்தின் முதல் மனிதனாக திகழ்ந்தவன் தமிழன் என்ற உண்மையும் புலப்பட்டிருக்கிறது. இந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, அதே ஊரில் ஒரு மியூசியம் அமைத்து காட்சிக்கு வைக்க முன் வராத தொல்பொருள் துறை, அந்த பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று வைக்க முடிவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மேலும் இந்த ஆராய்ச்சியை தொடர மனசில்லாமல் அரைகுறையாக நிறுத்திவிட்டு கிளம்பும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கீழடிக்கு சென்ற டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன், ஜனநாதன் ஆகிய மூவரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். “தமிழனின் பெருமையை அழிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை...
October 26, 2016
கல்யாண் ஜுவல்லர்சில் நான் பார்ட்னர் இல்லேங்க! நடிகர் பிரபு சிரிப்பு!
October 26, 2016டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர்...
<
டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர் பொதுஜனம், கடையே பிரபுவுக்கு சொந்ததமானதா இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும், “இல்லேப்பா… அவரு பார்ட்னரு. அவ்ளோதான்” என்று கொஞ்சமாக வெறுப்பேற்றுகிறார்கள். இனவெறி இன்வேட்டர்களான இன்னும் சிலர், “அதெப்படி அக்மார்க் தமிழனான பிரபு ஒரு மலையாளிக்கு சப்போர்ட் பண்ணி இவ்ளோ கூவு கூவுறார்” என்றெல்லாம் பிரச்சனை கிளப்பி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் தன் குழிக்கன்னம் குபீர் ஆகிற அளவுக்கு விளக்கம் கொடுத்தார் இளையதிலகம் பிரபு. ரொம்ப பேர் நான் கல்யாண் ஜூவல்லர்ஸ்ல பார்ட்னர்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. என்னோட பல வருஷத்து பிரண்ட் அவங்க. வெறும் ஐந்து கடையோட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு 130 கிளைக்கும் மேல இருக்கு. அதுல 70 கடையை நானே திறந்து வச்சுருக்கேன். அவங்களோட பிராண்ட் அம்பாசிடர்ங்கறதை...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
October
(156)
-
▼
Oct 26
(6)
- புடவை விற்ற ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ...
- சொழலி, கலகி, அழலி, எறலி - அர்த்தம் சொல்கிறார் பாடல...
- இன்ஸ்டன்ட் குலாப்ஜாமூன் மிக்ஸ் + டின்களில் அடைத்து...
- வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு!...
- தமிழனின் புகழை அழிக்கும் முயற்சி! ஹ்ம்… தமிழனின் க...
- கல்யாண் ஜுவல்லர்சில் நான் பார்ட்னர் இல்லேங்க! நடிக...
-
▼
Oct 26
(6)
-
▼
October
(156)