May 14, 2018
<
அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.அந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார்.இதில் ‘அஜித், விஜய் இருவரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன்’ என்று இவர் கூறியுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே இதை டெலிட் செய்துவிட்டது.ஆனால், அட்லீ சொன்னது உண்மை தான், இன்று அவர் திருப்பதி சென்றுள்ளார், அங்கு அவர் இப்படி தெரிவித்ததாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...
May 14, 2018
குஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி உருக்கம்
May 14, 2018சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு ...
<
சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.பிறகு ‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன்.அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்’ என்று உருக்கமாக பேசினார். ...
May 14, 2018
நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த யோகி பாபு - வீடியோ
May 14, 2018தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இந்த படத்திற்காக...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இந்த படத்திற்காக இசையமைத்து வருகிறார். ஒரு பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார். அந்த பாடலின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ...
May 14, 2018
நீட் தேர்வில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெறலாம்... புதிய பாடத்திட்டம் ரெடி!
May 14, 2018நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு ...
<
நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்திருப்பதே பெருமைக்கான காரணம். நீட்`தமிழக மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். இதற்குக் காரணம் 12 வருடங்களாக மாற்றப்படாமல் இருக்கும் பாடத்திட்டங்களே' என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதர வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 11-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களில், நீட் தேர்வுக்கான கேள்விகள் எத்தனை இடம்பெற்றிருக்கின்றன என்பது குறித்து தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்தது. பொதுவாக, நீட் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிலிருந்து சம அளவில் கேள்விகள்...
May 14, 2018
கத்தி எடுத்தப்ப கத்துனீங்க, இப்ப என்னாச்சு, எதற்கு கூட்டு, அதை காட்டு- விளாசி எடுத்த டி.ஆர்
May 14, 2018டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும். அப்படித்தான் சமீபத்தில் நடிக...
<
டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும்.அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.அதனால் அவர் பதவி விலகவேண்டும் என டி.ஆர், பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, ரித்திஷ் என அனைவரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர்.அப்போது பேசிய டி.ஆர் ‘நீ துப்பறிவாளனா, தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் என்றாயே, என்ன ஆனது, எதற்கு லைகாவுடன் வைத்தாய் கூட்டு, அதற்கு காரணம் காட்டு’ என்று கோபமாக பேசினார்.அதுமட்டுமின்றி ‘கத்தி படம் வந்த போது லைகாவுடன் கூட்டணி என்று கத்தினீர்களே, தற்போது ரஜினி, கமல் படங்களுக்கு பேசாமல் இருப்பது ஏன்?’ என்றும் கேட்டுள்ளார். ...
May 14, 2018
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நிச்சயம் இவர் இருப்பாராம்! சர்வே சொல்லும் தகவல்
May 14, 2018பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்...
<
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்கான சீசனுக்கு அதிக போட்டிகள் உள்ளது.அண்மையில் கமல்ஹாசன் இதன் புரொமோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். மேலும் சமீபகாலமாக இந்த சீசன் 2 ல் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என ஒரு பெரிய லிஸ்ட் பரவிவருகிறது.உண்மையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. அதே நேரத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று அந்த பட்டியலை கொண்டு ஒரு சர்வே நடத்தியுள்ளது.இதில் பதிவான ஓட்டுக்களில் அதிக சதவீத ஓட்டுக்கள் நடிகர் தாடி பாலாஜிக்கும், நடிகை சொர்ணமால்யாவுக்கும் விழுந்துள்ளது. ஆனால் நிகழ்ச்சிக்குழுவின் முறையான அறிவிப்புக்களுக்காக காத்திருப்போம். ...
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
May
(70)
-
▼
May 14
(6)
- அஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ ச...
- குஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொ...
- நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த யோகி பாபு - வீடியோ
- நீட் தேர்வில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெறலாம்... ப...
- கத்தி எடுத்தப்ப கத்துனீங்க, இப்ப என்னாச்சு, எதற்கு...
- பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நிச்சயம் இவர் இருப்பாராம்...
-
▼
May 14
(6)
-
▼
May
(70)