­
11/04/16 - !...Payanam...!

அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ...

<
அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரம் இப்படி உச் கொட்ட வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரியை. பல மாதங்களாக போராடி போராடி இந்தப்படத்தை முடித்துவிட்டார் கவுதம்மேனன். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதால் கொடுக்கல் வாங்கல்களில் ஏராளமான குழப்பம். சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்று அவர் மேல் பழியை தூக்கிப் போட்டார் கவுதம். எவ்வளவு காலத்திற்குதான் இடிக்கு மத்தளமாக இருப்பது? நிஜ நிலவரத்தை புட்டு புட்டு வைத்துவிட்டார் சிம்பு. “முதல்ல சம்பளத்தை ஒழுங்கா கொடுங்க. அப்புறம் நான் ஒழுங்கா வர்றேனா, இல்லையான்னு விமர்சனம் பண்ணுங்க” என்று காச் மூச் ஆகிவிட்டார். படம் ஆரம்பித்து நாற்பது சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார் அப்படத்தின் நாயகியான பல்லவி சுபாஷ். மீண்டும் மஞ்சிமா மோகனை வைத்து படத்தை...

Read More

இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்...

<
இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான இருவருமே பாலாவின் படத்தால் உலகறியப்பட்டார்கள். அதற்கு முன்பே சண்டைக்கோழிக்கு வசனம் எழுதியவர்தான் எஸ்.ரா. இருந்தாலும் பாலாவின் படம் என்றால் தன் அந்தஸ்து உண்டல்லவா? எப்படி பாலாவை விட்டு ஒவ்வொரு ஹீரோக்களாக ஓடி ஒளிகிறார்களோ… அப்படியே இவர்களும் ஓடி ஒளிந்துவிட்டார்களா என்ன? இந்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது ஒரு விஷயம். பாலா தற்போது தயாரித்து இயக்கி வரும் படத்தில் பிரபல நடிகர் நடிகைகள் ஒருவரும் இல்லை. சாட்டை படத்தில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கிய யுவன் என்ற சின்ன பையன்தான் ஹீரோ. ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வென்ற ஒரு இளம்பெண்தான் ஹீரோயின். இந்தப்படத்திற்குதான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் ரமணகிரிவாசன்  என்பவர் வசனம் எழுதியிருக்கிறாராம். ஒருவேளை இந்தக்கதைக்கு...

Read More

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரத...

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர… பாலா என்றொரு இயக்குனரை திரிந்துப்போன பாலாக நினைத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டது ரசிகர்களின் மனசு! கடைசியா பாலா ஹிட் கொடுத்து ஆறு வருஷம் இருக்குமா? “ஞாபகமில்ல… அதை விடு, அந்த சொப்பன சுந்தரி பாட்டை கேட்டியா மாப்ளே”ன்னு போய் கொண்டே இருக்கிறான் ரசிகன்! இந்த நேரத்தில் முன்னணி நடிகர்களும் பாலாவுக்கு கால்ஷீட் கொடுக்க அஞ்சுவதால், அங்க சுத்தி இங்க சுத்தி, கடைசியில் தன் சொந்த விரலில் நகச்சுத்தி வந்த சோகத்தை மறைக்க ஒரு அவசர சினிமா எடுக்க நினைக்கிறாராம் பாலா. அது நெஞ்சை கிளறும் காதல் கதை என்றும் கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். அந்த அற்புத திரைப்படத்தில் நடிக்க, பாலா தேர்ந்தெடுக்கும் அழகன் யார் தெரியுமா?...

Read More

சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கு...

சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது கிசுகிசுக்களை தந்து வாழ விடுகிறார்கள் நடிகர்களும், நடிகைகளும். போன வாரம் ரம்பா. அதுக்கு முந்தைய வாரம் வரைக்கும் அமலாபால். இந்த வாரம் யாருப்பா? என்று மூக்கு நுனியை சொறிகிற நேரத்தில்தான் தானாய் வந்து சிக்கினார் கவுதமி. காதும் காதும் வைத்த மாதிரி பிரிந்துத் தொலைய வேண்டியதுதானே? கவுதமி கமல் வீட்டில்தான் குடியிருக்கிறாரா, அல்லது ஆழ்வார்பேட்டையை காலி பண்ணிவிட்டு, அயனாவரத்துக்கு போய் விட்டாரா என்று எவன் கேட்கப் போகிறான்? ஆனால் ஊர் உலகத்தையே உறங்கவிடாமல் பண்ணிவிட்டது கவுதமியின் விலகல் அறிக்கை. என்னதான் நடந்தது? அடுக்கடுக்காக ஆழ்துளை போட்டு அலசியதில் ஒரு விஷயம் பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாரல்லவா கமல்? அப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனர்...

Read More

முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்...

முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று எடுக்கப்பட்டது. தற்போது, அவர் நன்றாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப்ரெட்டி இன்று விளக்கம் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னைப் பற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்ந்து வருகிறார். முதல்வர் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு மருத்துவரோ, ஒரு மருத்துவமனை மட்டும் அல்ல, மிகப்பெரிய மருத்துவர்கள்...

Read More

பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொல...

<
பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொலைநோக்கி மூலம், இந்த விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அரசின் விக்யான் பிரசார மையத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். "இந்த விரிசல் நடந்தது இப்போது கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடந்த சம்பவம்தான் இது. சூரியனில் இருக்கும் 12371 என்னும் சூரியப் புள்ளி எரிமலை போல வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருந்து அயனித்துகள்கள் என்னும் மின்னேற்றம் பெற்ற துகள்கள் நாலா புறமும் உமிழப்பட்டது. இது பூமியை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வந்தடைந்தது. தொலைவின் காரணமாக தாமதமாக புவியை வந்தடைந்திருக்கிறது. அப்படி வந்த துகள்கள், பூமியை சுற்றி இருக்கும் காந்தப்புலத்தை தாக்கியதால் ஏற்பட்டதுதான்...

Read More

Search This Blog

Blog Archive

About