September 23, 2018
மாதவன் படத்திற்கு சிக்கல்! விஞ்ஞானிக்கே வெடிகுண்டா?
September 23, 2018<
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் என்கிற விஷயம்தான் அது. யாரிந்த நம்பி நாராயணன்?பிரபல விஞ்ஞானியான இவர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்தவர். 90 களில் இவரை திடீரென கைது செய்த அரசு, அவர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சியது. குற்றம் நடந்தது என்ன?இஸ்ரோவின் பல ரகசியங்களை இவர் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்திய நம்பி நாராயணன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆனதுடன், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 50 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த கதையைதான் படமாக்கப் போகிறார்கள். இங்குதான் சிக்கல்.சென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி...