November 22, 2017
காது கிழிய கானா பாடல், கட்டண கழிப்பிட தொல்லை – பேருந்து பயண அனுபவங்கள்… அவஸ்தைகள்!
November 22, 2017<
பெருநகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளை அந்த நெடுஞ்சாலையில் உள்ள ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் இளைப்பாற நிறுத்துகிறார்கள்…….. ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் இலவசமாக அங்கே உணவு வழங்கப்படுகிறது….. வேறு என்ன தருகிறார்கள் என்பது தெரியவில்லை…. பயணக்களைப்பினால் பயணிகள் நாம் ஏதாவது வாங்கினால் விலை தாறுமாறாக இருக்கிறது….. விலைக்கேற்ற தரமான பொருட்களும் கிடைப்பதில்லை….. லாபம் அதிகம் கிடைக்கும் பெயர் தெரியாத பிராண்டுகளின் பொருட்களே அதிகமாக விற்கப்படுகின்றன……. அங்குள்ள ஹோட்டல்களில் சாப்பிட நினைப்பவர்கள் சில விசயங்களை மனதில் கொள்ள வேண்டும்….. முதலில் நீங்கள் சாப்பிடப்போகும் உணவுகளின் விலையை கண்டிப்பாக தெரிந்து கொள்ளவும்….. சாதாரண ஹோட்டல்களைப்போல் எண்ணிக்கொண்டு சாப்பிட்டு விட்டு பில்லைப்பார்த்தால் ராயல் லீ மெரிடியன் விலைப்பட்டியலை நீட்டுவார்கள்…..( திருச்சி To சென்னை சாலையில் ஒரு மசாலா தோசைக்கு 80 ரூபாய் கொடுத்திருக்கிறேன்…. வயிறு உபாதைகள் இலவசம் ) மிரட்டும் தொனியில் டிப்ஸ் வேறு கேட்ப்பார்கள்…… உணவு, தரம், அளவு, விலைப்பற்றி பேசினால் காதில் வாங்கிகொள்ள...