November 30, 2016
ஆரம்பிச்சுட்டாய்ங்க! அடுத்த கொசுக்கடிக்கு தயாராகிறார் ரஜினி?
November 30, 2016செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘ல...
செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய
விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை என்று கூறிவரும் நிலையில், அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். இது கபாலி பஞ்சாயத்து.
2.0 படப்பிடிப்பில் இருந்த ரஜினியிடம் ஒரு நீண்ட அழுகாச்சி கடிதத்தையும் வழங்கியிருக்கிறது அது! ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று கூறியிருக்கிறாராம் ரஜினி.
இது ஒரு புறமிருக்க, தயாரிப்பாளர் தாணு தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன?
“கபாலி படம் வெற்றிகரமாக 150 நாட்களைத் தாண்டிய பிறகு நஷ்டம் என்று கூறிப் பணம் கேட்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? சினிமா தொழிலே ஆபத்தானதாக, எந்த உத்தரவாதமும் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இனி இந்தத் தொழிலை எப்படி நம்பிக்கையுடன் தொடர்வது என்றே தெரியவில்லை. இது வியாபாரமல்ல. மிரட்டல்.. ப்ளாக்மெயில்… பொய்யாக எதையாவது மீடியாவில் சொல்லி பரபரப்புக் கிளப்புவதுதான் இவர்களின் நோக்கம்” என்கிறார்கள் அவர்கள்.
திருச்சி பகுதியில் கபாலியை வெளியிடும் உரிமையை தாணுவிடமிருந்து பெற்றவர் பிரான்சிஸ். முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன். இவரிடமிருந்து படத்தை வாங்கியவர்கள்தான் இப்போது நஷ்டக் கணக்கு காட்டுபவர்கள். 7 கோடிக்கு படத்தை வாங்கிய பிரான்சிஸ் அதை 9 கோடிக்கு விற்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரான்சிஸ் தயாரித்த படமான ‘மியாவ்’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தாணுதான் சிறப்பு விருந்தினர்.
என்னய்யா சொல்றீங்க?