December 04, 2017
மீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா!
December 04, 2017<
தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. இனி மோகன் ராஜா படமே வேண்டாம் என்கிற அளவுக்கு கோபமாக இருந்தார் அவர். ஆனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் சிவகார்த்திகேயனுக்கு இருந்தது.பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகுதான் இப்படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் நயன். அதுவும் சிவகார்த்திகேயனுக்காக. மற்ற படங்களை விட, இங்கு சற்று அதிகமாக படியளந்தார்கள். ஏராளமான சுதந்திரம் இருந்தது அவருக்கு.இதற்கு நடுவில்தான் அறம் படம் வெளிவந்தது. முதன்முறையாக அப்படத்தின் பிரமோஷன் விவகாரங்களில் கலந்து கொண்டார் நயன். படம் வெளியான அதே தினம் அவர் சில தியேட்டர்களுக்கும் நேரடி விசிட் அடித்தார். இதையடுத்து...