ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
March 15, 2018தமிழ் சினிமாவில் அஜித், மாதவன் என்ற வரிசையில் பெண்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு பலவருடங்களாக கல்யாணம் ஆகாமல் இர...
ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்
March 15, 2018ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து லைகா தயாரிப்பில் கமல் நடிக்க, இந்தியன் 2 படத்தை இயக்...
நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!
March 15, 2018இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்...
நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.
யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.
'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.
ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.
அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.
நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.
ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.
இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.
ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.
ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.
பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.
நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.
இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!
இதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படுத்த மாட்டீங்க!
March 15, 2018பெரும்பாலான நகரங்களில் பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை நம்பித்தான் மக்கள் பலர் உள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக...
பிடிபட்ட தமிழ்ராக்கர்ஸ்! இவனுங்கதான் அந்த அட்மின்ஸ்!
March 15, 2018‘புலி ஊருக்குள்ள வந்திருச்சு. கூண்டுல எதையாவது மாட்டி வச்சு புடிங்க…’ என்று அலறும் பொதுஜனம் போல, ‘எதையாவது செஞ்சு இந்த தமிழ் ராக்கர்சை புடி...
அன்பே சிவம் படம் குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்
March 15, 2018அன்பே சிவம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். இப்படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பட...
கோடிகளில் புரளும் ஷாருக்கானின் அரண்மனையை பார்த்ததுண்டா? அம்மாடியோவ் இவ்ளோ பெரிசா
March 15, 2018பொதுவாக நம்முடைய வாழ்வில் அரண்மனை போன்று பெரிய வீடு கட்ட வேண்டும் என்ற பெரிய ஆசை மற்றும் கனவு நம் அனைவரிடத்திலுமே இருக்கும். ஆனால் நம்முடைய...
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
March
(136)
-
▼
Mar 15
(8)
- போனிகபூரை கதற விட்ட அமீர்கான் - அப்படி என்ன சொன்னா...
- ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூற...
- ரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்
- நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட...
- இதை படித்தபின் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை பயன்படு...
- பிடிபட்ட தமிழ்ராக்கர்ஸ்! இவனுங்கதான் அந்த அட்மின்ஸ்!
- அன்பே சிவம் படம் குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்ட ...
- கோடிகளில் புரளும் ஷாருக்கானின் அரண்மனையை பார்த்தது...
-
▼
Mar 15
(8)
-
▼
March
(136)