அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெயலலிதாவைச் சுற்றி ‘பவர் சென்டர்’கள்
November 03, 2016தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 42 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நலனில் இன்னும் முழு...
கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளும் சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகளில் தொடர் சிகிச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'முதல்வரின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, சில நிகழ்வுகள் அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே, முதல்வருக்கு டி.வியில் காண்பிக்கிறார்கள். மன்னார்குடி உறவுகளின் அதிகாரம் உறுத்தும்படி இருக்கிறது!’ எனக் குமுறுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். அவர்கள் ஆதங்கத்தோடு பட்டியலிட்ட சில நி்கழ்வுகள் இங்கே...
1. முதல்வருக்கு பிஸியோதெரபி சிகிச்சை மட்டும் மேலும் ஒரு மாதம் தொடர்ந்து கொடுக்க இருக்கிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்து சென்னையில் தங்கி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தந்த பிஸியோதெரபிஸ்ட் ஒருவர், அக்டோபர் 31-ம் தேதி சென்னையை விட்டு புறப்பட்டுப்போனார். அதே தினம் டெல்லியில் இருந்து இன்னொரு பிஸியோதெரபிஸ்ட் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தொண்டையில் மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாலும், வென்டிலேட்டர் இணைப்பு இருப்பதாலும் ஜெயலலிதாவால் பேசமுடியவில்லை. சசிகலாவை கூப்பிடவேண்டும் என்றால், கையால் 'எஸ்' என்று சைகை காட்டுகிறார். உடனே சசிகலாவை அழைத்துவருகிறார்கள். அடிக்கடி கை கடிகாரம் இருக்குமிடத்தை காட்டி, 'வீட்டுக்குப் போகலாமா?' என்கிற தொனியில் கேட்கிறாராம்.
2. 42 நாட்கள் தொடர்ந்து படுக்கையில் இருப்பதால், அவரை நிற்கவைத்து, மெள்ள நடக்க வைக்கும் வகையில் பிஸியோதெரபி பயிற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆஸ்பத்திரி சூழ்நிலை வேறு... வீட்டு சூழ்நிலை வேறு...! வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். அப்படி ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அப்போலாவுக்கு வரமாட்டார்; நேராக லண்டன்தான் சாய்ஸ். ஆனால், முன்பு இருந்ததைப் போல மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
3. அப்போலோவில் சசிகலா, இளவரசி... இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள்தான் ஜெயலலிதா அறை அருகே ஆரம்பத்தில் போய் வந்தார்கள். ஆனால், இளவரசி தரப்பினர் தற்போது கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றனர். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் திருமணத்தில் ஆரம்பித்த மனக்கசப்பு இன்றுவரை தொடர்கிறதாம். ஆனாலும், இவர் மேற்பார்வையில் சென்னையில் சில பிஸினஸ்கள் நடப்பது வேறு விஷயம். இளவரசி, அவரின் மகள்கள் சகிலா, கிருஷ்ண பிரியா ஆகியோர் ஜெயலலிதாவின் அறைக்குள் போய்வருவதைக் கண்டு முகம் சுளித்திருக்கிறார் சசிகலா. இவர்களின் நடமாட்டத்தை ஜெயலலிதா அறவே விரும்பவில்லை என்று சசிகலா தரப்பினர் சொல்லி தடா போட்டு வருகிறார்கள்.
4. அப்போலோ மருத்துவமனையின் மூன்றாவது மாடியின் சில அறைகளை சசிகலா கோஷ்டியினர் தங்குவதற்காக எடுத்துள்ளனர். அங்குள்ள அறைகளில் ஒன்றில், ஜெயானந்த் திவாகரன் அடிக்கடி தென்படுகிறார். மருத்துவமனைக்கு ஜெயலலிதா வந்த ஆரம்ப நாட்களில் ஜெயானந்த் வந்த காரை வாசலில் நின்ற போலீஸ் அதிகாரி ஒருவர் விடவில்லை. தடுத்து நிறுத்தியிருக்கிறார். கோபமான ஜெயானந்த் அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த போலீஸ் அதிகாரி அங்கே தென்படவில்லை. இந்த நிகழ்வு சென்னை போலீஸார் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கிவிட்டது.
5. ஜெயலலிதாவுக்கு அறவே பிடிக்காதவர்கள் லிஸ்டில் இருந்தவர்களில் மன்னார்குடி திவாகரன், கோவை ராவணன் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், இவர்கள் அப்போலோவுக்கு விசிட் அடித்துவிட்டுச் சென்றார்கள். ஆனால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பினார்கள். அப்போலோ நிர்வாகத்துக்கு வேண்டப்பட்ட மூன்று எழுத்து நபர் ஒருவர், அடிக்கடி மூன்றாவது மாடிக்கு விசிட் வருகிறார். சசிலா தரப்பினரை 'பாஸ்' என்றுதான் அழைக்கிறாராம் இவர். மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, சில பல பிஸினஸ் விஷயங்களில் ஏற்கெனவே மன்னார்குடிக்கு இவர் அறிமுகம் உண்டாம். அதைவைத்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களின் கார் எண்ணை மன்னார்குடி நபர்கள் சிலர் அந்த மூன்றெழுத்து பிரமுகரிடம் சொல்லுவார்களாம். உடனே, அவர் அப்போலோ செக்யூரிட்டி பிரிவினருக்கு 'வி.ஐ.பி' வருகிறார் என்று முன்கூட்டியே தகவல் கொடுத்து காரை போர்டிகோ வரை அனுமதிக்க சொல்லுகிறாராம். மருத்துவமனை ரிசப்ஷனுக்கு மருத்துவமனை பிரமுகர் நேரில் வந்து வி.ஐ.பி-களை அழைத்துப் போய் இரண்டாவது மாடியில் விடுகிறாராம். இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய உளவுத்துறையினர், மருத்துவமனை பிரமுகரின் பிஸினஸ் விவரங்களை தோண்டி வருகிறார்கள். எங்கேயாவது மன்னார்குடி நபர்களின் பெயர் வருகிறதா? என்று விசாரித்து வருகிறார்கள்.
6. உயர் அதிகாரிகள் தரப்பில் பவர் சென்டர்களை அப்போலோவுக்கு அனுப்பி வருகிறார்களாம். உதாரணத்துக்கு, சில நாட்களுக்கு முன்பு, மதம் தொடர்பான மூன்றெழுத்துப் பிரமுகர், திடீரென அப்போலோ மருத்துவமனையின் உள்ளே சக தோழர்களுடன் வந்து பிரார்த்தனை நடத்தினார். இதே நோக்கத்தில் வரும் மற்றவர்களுக்கு மருத்துவமனை வாசலில் ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் பிரார்த்தனை நடத்திவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அந்த மூன்றெழுத்துப் பிரமுகருக்கு விசேஷமாக ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டதாம். காரணம்...உளவுத்துறை ஐ.ஜியான சத்தியமூர்த்தி சிபாரிசு என்கிறார்கள்.
7. கோவையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பிடித்து அவர் மூலம் சத்தியமூர்த்தியை அணுகி விசேஷ அனுமதி வாங்கினாராம். இந்த நபரை பார்த்த சில அமைச்சர்கள் திடுக்கிட்டார்களாம். ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் ராஜாத்தி அம்மாள் அணியில் இருந்தவராம். பிஸினஸ் டீலில் நடந்த தகிடுதத்தங்களை பார்த்து இவரை விரட்டி விட்டார்களாம். ' விஜயகாந்தை தி.மு.க கூட்டணிக்கு கொண்டுவருகிறேன்' என்று சொல்லித் திரிந்தாராம். விஜயகாந்த்தும் இவரின் சுயரூபம் தெரிந்து கழட்டிவிட்டாராம். பலமுறை அ.தி.மு.கவுக்குத் தாவ நினைத்தும், முதல்வர் ஜெயலலிதா அவரை அனுமதிக்கவில்லை. தற்போது மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில், புறவாசல் வழியாக அப்போலோவில் அட்டடென்ஸ் போட்டுவிட்டாராம்.
8. எம்.என் நடராஜனின் சகோதரர்கள் பழனிவேலு, எம்.ஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன்...இருவரும் அப்போலோ பக்கம் அவ்வப்போது வந்து போகிறார்கள். நடராஜன் & சசிகலா குடும்ப உறவுகள் இடையே நல்லெண்ண தூதுவராக பழனிவேல் செயல்படுவதாக அ.தி.மு.கழக கட்சிக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும், சசிகலா குடும்ப ஆதிக்கம்தான் அப்போலோவில் மேலோங்கி இருக்கிறது. வருகிற நவம்பர் 6-ம் தேதியன்று நடராஜனின் மூத்த சகோதரர் சாமிநாதனின் 80-வது பிறந்தநாள் வருகிறது. அதை கோலகலமாக கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அழைப்பிதழ் அடித்து சொந்தபந்தங்களை அழைத்திருக்கிறார்கள். பூர்வீக கிராமமான விளாரில் பிறந்தநாள் விழா நடக்க ஏற்பாடாகி வருகிறது. நடராஜன் தரப்பினர் அன்று ஒன்று கூடுகிறார்கள்.
கமல் ஹாசனுக்கு தடால் பதிலடி கொடுத்த வாணி கணபதி! ஷாக்கிங் ரிப்போர்ட்!
November 03, 2016கமல் ஹாசனின் திறமைகள், வெற்றிகள் என பல விஷயங்களை தவிர அந்தரங்க விஷயங்களை யாரும் தெரிந்துவைத்திருக்க மாட்டார்கள். அவருடைய முதல் திருமணம் ...
அவருடைய முதல் திருமணம் 1978 இல் பிரபல நடன கலைஞர் வாணி கணபதியுடன் நடந்தது. பின் 1988 இல் விவாகரத்து. அதன் பின் இந்த விஷயம் காற்றோடு பறந்து போய்விட்டது.
அந்த சமயத்தில் கமல் என்ன சொன்னார் தெரியுமா?
ஸ்ருதி ஹாஸன் பிறந்தபோது நான் எல்லாபணத்தையும் இழந்த நிலையில் இருந்தேன். ஏனெனில் வாணியை விவாகரத்து செய்ததால் ஜீவனாம்சம் தர வேண்டி இருந்தது. மீண்டும் வாழ்க்கை ஜீரோவிலிருந்து துவங்கியது.
அப்போது கூட வாடகை வீட்டில் தான் இருந்தேன் என்றார் கமல்.
வாணி கணபதியின் பதிலடி!
இந்திய நாட்டில் விவாகரத்து செய்ததற்காக தரப்படும் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கிவிடுமா?
இல்லை அந்த பெண்ணின் வாழ்நாளுக்கு தேவையான முழு தொகையையும் தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறதா என்ன? போதிய அளவு பணம் தான் கிடைக்கிறதா?
அவர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?
கமல் எப்போது சொந்த வீட்டில் இருந்தார்? திருமணத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் வாடகை வீட்டில் தான் இருந்தோம். ஆனால் கொஞ்ச நாட்கள் என் வீட்டாரின் சொந்த வீட்டில் இருந்தோம்.
அவரிடம் தேவையான பணம் இருக்கிறது. அதனால் அவருக்கு திவாலாகிவிடும் சூழ்நிலை ஏதும் கிடையாது. தனக்கு திறமை இருக்கிறது என்பதற்காக யார் மேலாவது பழி போட்டுவிடுவார்.
அவருக்கு வேறு ஏதாவது வழிகளில் பணம் போயிருக்கலாம். அதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
கமலிடம் நான் பேசுவது கிடையாது. பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. அவருக்கு அனுதாபம் வேண்டும் என்றால் யார் பெயரையும் பயன்படுத்தி வாங்க கூடாது, அவருடைய வீழ்ச்சிக்கு நான் காரணமே கிடையாது என அதிரடியாக கூறிவிட்டார்.
கமல் ஹாசன், கவுதமி பிரிவை தொடர்ந்து பல விஷயங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
’இறுதி எச்சரிக்கை...உலகம் அழியப்போகிறது..!’ - அலூனா சொல்லும் செய்தி
November 03, 2016இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்...
ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின் டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான "கோகி" (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள். எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது. அப்படியானவர்கள், 1990-ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா ( ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். அந்த செய்தி...
"இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள். இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்... வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்..."
"உலகின் இதயத்திலிருந்து..." (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன. பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது "அலுனா" (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.
அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு... அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன. “எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை” என்று நம்புகிறார்கள் கோகிகள். அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை "மாமோ"க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள். ஒரு "கோகி", "மாமோ"வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் "அலுனா"...
இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள் வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக "பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள். பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.
வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர். பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார். அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள்.
தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்... தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்... கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
“ நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்...சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்...” என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”. மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன... அது “அலுனா” !!!!
அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!
November 03, 2016ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்… இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆன...
ராகவேந்திரா லாரன்ஸ் மாதிரி, ரஜினியின் ஜெராக்ஸ்களே ரஜினி படத்தை ரீமேக் பண்ணினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்? அந்த அற்புதத்தை நமக்கு வழங்கப் போகிறார் அவர். யெஸ்… ரஜினியின் தெறிக்க விட்ட ஹிட் படமான மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் லாரன்ஸ். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த பேச்சு வார்த்தை, இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரக்கூடும். அந்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற தகவலும் அப்போதுதான் தெரியவரும்.
ஆரம்பத்தில் ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட இருபெரும் நடிகர்கள் அஜீத்தும், விஜய்யும். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை. நடுவில் சிலர், மூன்று முகம் என்கிற தலைப்பு வரைக்குமாவது கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டதும், அந்த கணக்கு வெறும் முட்டை கணக்கு ஆனதும் ரசிகர்கள் அறிந்ததுதான்.
லாரன்சின் இந்த மூன்று முகம் முயற்சிக்கு ஜிகிர்தண்டா படத் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் துணை நிற்கிறாராம். நடக்கட்டும்… நல்லதே நடக்கட்டும்!
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆன்ட்டனி!
November 03, 2016மாணவர்களை அடிமையாகவே நடத்தும் ‘குரு குலம்’ என்கிற கான்சப்ட் இப்போதும் இருக்கிறதா, தெரியாது. ஆனால் குரு பலம் என்கிற விஷயத்திற்கு விஜய் ஆன்ட்...
இன்று சென்னையில் நடந்த ‘சைத்தான்’ பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சீஃப் கெஸ்ட் எஸ்.ஏ.சிதான். இங்கு மட்டுமல்ல, தனது வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் தவறாமல் அவரை அழைத்துவிடுவார் வி.ஆ. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி தனக்கும் விஜய் ஆன்ட்டனிக்குமான ஆரம்ப நாட்களை சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்தார்.
“சுக்ரன் படம் எடுத்த நேரத்தில், இவருடைய பெயர் அக்னி. டைட்டிலில் என்னப்பா பேர் போடுறது என்று கேட்டதற்கு, “அக்னின்னு போடுங்க” என்றார். உன் சொந்தப் பேர் என்ன என்றேன். விஜய் ஆன்ட்டனி என்றார். “விஜய் என்றால் வெற்றி. ஆன்ட்டனி என்பதும் நல்ல பெயர்தான். ஏன் அக்னின்னு வைக்கணும். பேசாம சொந்தப் பெயரே இருக்கட்டுமே” என்றேன். இன்று அவர் வளர்ந்து பெரிய ஹீரோவாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
மேடை கொள்ளாமல் விருந்தினர்களை ஏற்றி பெருமைப்பட்ட விஜய் ஆன்ட்டனி, தனது உரையை மட்டும் மிக மிக சுருக்கமாக வைத்துக் கொண்டார். வண்டி வண்டியா பேசுறதை விட, செயல்பாடு முக்கியம் என்று நம்புகிற பலரும் இப்படிதான்! சைத்தான் படத்தை இருமுகன், தேவி ஆகிய இரு வெற்றிப்படங்களை வாங்கி வெளியிட்ட ஆரா சினிமாஸ்தான் வாங்கியுள்ளது. (முந்தைய சென்ட்டிமென்டுகள் தொடரட்டும்… )
பின் குறிப்பு- இப்பவும் இசை சம்பந்தமான கல்வியை வித்வான்களிடம் கற்று வருகிறார் மிஸ்டர் சைத்தான். “தினம் தினம் எதையாவது கத்துக்கணும். அதுதான் நல்லது…” இதுவும் விஜய் ஆன்ட்டனியின் நம்பிக்கைதான்!
கொடி, காஷ்மோராவுக்கு கிடைத்த ஜாக்பாட்!
November 03, 2016சென்ற வாரம் கொடி, காஷ்மோரா, ஏ தில் கை முஷ்கில் படங்களால் கலர்ஃபுல் ஆனது தீபாவளி. இந்த வாரம் அதற்கு அப்படியே எதிராக தமிழில் எந்த படமும் வெ...
மலையாளம்:
ஆனந்தம்:
இன்ஜினியரிங் படிக்கும் நண்பர்களின் இன்டஸ்ட்ரியல் விசிட் பயணமே கதை. காதல், நட்பு, கனவுகள், சண்டைகள் என அவர்களின் அந்த நான்கு நாள் ட்ரிப்பில் நடைபெறும் சம்பவங்களாக விரியும் படம். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் உதவி இயக்குநர் கணேஷ் ராஜ் இயக்கியிருக்கிறார். நேரம், ப்ரேமம் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். கேரளாவில் அக்டோபர் 21ம் தேதியே வெளியாகிவிட்ட படம் இப்போது தான் நம்ம ஊரில் வெளியாகிறது.
ஆங்கிலம்:
டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்:
காமிக்கிஸில் இருந்து சினிவான இன்னொரு சூப்பர் ஹீரோ படம் தான் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ். முன்னாள் நரம்பியல் மருத்துவருக்கு கிடைக்கும் அதிசய சக்திகளும், அவர் சந்திக்கும் எதிரிகளும் என பக்கா சூப்பர் ஹீரோ பேக்கேஜ். சினிஸ்டர் படம் இயக்கிய ஸ்காட் ட்ரிக்சன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். லீட் ரோலான ஸ்டீஃபன் ஸ்ட்ரேன்ஜ் கதாப்பாத்திரத்தில் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்திருக்கிறார். படம் ஐமேக்ஸிலும் வெளியாகிறது.
ட்ரோல்ஸ்:
தங்களின் இருப்பிடத்தில் மிக மகிழ்ச்சியாக, ஆடி பாடி கொண்டாடுகிறது ட்ரோல்ஸ். அவர்களின் லீடராக இருக்கிறது பாப்பி. ட்ரோல்ஸ் குழுவுக்கு அப்படியே எதிரான மகிழ்ச்சியே இல்லாத கூட்டம் பெர்கைன். அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி ட்ரோல்ஸ்களை சாப்பிடுவது மட்டும். பெர்கைனின் திடீர் தாக்குதலை பாப்பியும், ப்ரான்சும் எப்படி சமாளித்து வெல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஸ்கை ஹை, அல்வின் அண்டு த சிப்மங்க்ஸ் படங்களை இயக்கிய மைக் மிச்சேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மிஸ்டர்.சர்ச்:
கார்லோட் ப்ரூக்ஸ் மற்றும் அவரது தாய் மேரி ப்ரூக்ஸ் இருவரும் ஒரு அப்பார்மெண்டில் வசித்து வருகிறார்கள். அங்கு சமையல் செய்வதற்காக வருபவர் சர்ச். இந்த மூன்று பேர்களுக்குள் நிகழும் சம்பவங்களே படத்தின் கதை. சென்ற மாதமே அமெரிக்காவில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றது படம். படத்தை ப்ரூஸ் ப்ரிஸ்ஃபோர்ட் இயக்கியிருக்கிறார்.
அவதார்:
இன்றும் நாளையும் ஐமாக்ஸ் தொழிநுட்பத்தில் ஜாஸ் சினிமாவில் திரையாகவிருக்கிறது ஜேம்ஸ் கேமரூனின் அவதார்.
தமிழ் படம் எதுவும் வெளியாகவில்லை என்ற கவலை வேண்டாம் உறவுகளே... அடுத்த வாரம் பல நாட்களாக தள்ளிப்போன 'அச்சம் என்பது மடமையடா' வெளியாக இருக்கிறது.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
November
(109)
-
▼
Nov 03
(7)
- அந்த பிரபல நடிகையை நான் காதலித்தேன் - கமல் ஓபன் டாக்
- அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெய...
- கமல் ஹாசனுக்கு தடால் பதிலடி கொடுத்த வாணி கணபதி! ஷா...
- ’இறுதி எச்சரிக்கை...உலகம் அழியப்போகிறது..!’ - அலூன...
- அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!
- விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆ...
- கொடி, காஷ்மோராவுக்கு கிடைத்த ஜாக்பாட்!
-
▼
Nov 03
(7)
-
▼
November
(109)