December 14, 2016
சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!
December 14, 2016 சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான். நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று...