May 31, 2019
புதிய கல்விக் கொள்கை: இனி இந்தி கட்டாய பாடம்’-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு!
May 31, 2019<
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மத்தியில் பாரதிய ஜனதா அரசு காலங்களில் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னர் ராஜீவ்காந்தி பிரதமராக இருத தாரளமயமாக்கலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை மாற்றப்பட்டது.தற்போது பாரதிய ஜனதா அரசு, தம்முடைய இந்துத்துவா கொள்கைக்கு ஏற்க கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிக்கிறது என்பது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை கல்வியாளர்கள் நடத்தி உள்ளனர்.கடந்த பாஜக அரசும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழுவை அமைத்தது. இக்குழு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தியை திணிக்க முயற்சிக்கும் வகையில் இதன் பரிந்துரைகள் இருக்கின்றன என குற்றம்சாட்டப்பட்டது.கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள்கஸ்தூரி ரங்கன் குழு தமது பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஸ்....