August 22, 2018
’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன்
August 22, 2018<
1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம். ``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம்...