November 08, 2016
'திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லை. ஆனால்...?' - வலுக்கும் வாதம் எதிர்வாதம்
November 08, 2016<
திருக்குறள் தொடர்பாக முனைவர். துளசி ராமசாமி வெளியிடும் கருத்துகள் ஆய்வு நோக்கில் மிக முக்கியமானவை. அதிலும், ' நமது பண்பாடு குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் வெளிநாட்டவர்களிடையே ஏராளமான கோளாறுகள் இருக்கின்றன. நம்முடைய அணுகுமுறையிலும் சிக்கல்கள் இருக்கின்றன' என்கிறார் அவர். ' சமண முனிவர்கள் எழுதியதுதான் திருக்குறள்' என்ற புத்தகத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் முனைவர்.துளசி ராமசாமி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல ஆண்டுகாலம் மூத்த ஆய்வாளராக பணியாற்றியவர். இதுவரையில், 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். தற்போது ‘களப்பிரர் காலம் இருண்ட காலமா? இருட்டடிப்புச் செய்த காலமா?’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வருகிறார். இந்நிலையில், பழந்தமிழர் குறித்த ஆய்வில் நிகழும் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். " ஆய்வுப் பணிகளில் ஈடுபடும்போது தரவுகள் சரியாக இருந்தால்தான், ஆய்வில் எந்த முறையைப் பயன்படுத்தினாலும் மிகச் சரியானதாக இருக்கும். நம்மைப் பற்றிய ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தேன்....