January 12, 2017
பைரவா - திரைவிமர்சனம்
January 12, 2017 இந்தியாவிற்கு எப்போதும் ஒரு தீபாவளி தான். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்கள் வரும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். அப்படித்தான் இந்த பொங்கலுக்கு சரவெடியாய் பைரவா களம் இறங்கியுள்ளது. இளைய தளபதி ஏற்கனவே தெறி வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்க, அவர்கள் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க உடனே பைரவாவில் களம் இறங்கினார். அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பானதா? பார்ப்போம். கதைக்களம் இளைய தளபதி விஜய் சென்னையில் ஒரு வங்கியில் பணம் வசூல் செய்பவராக இருக்க, ஒரு பிரச்சனையில் அவருடைய உயர் அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு உதவுகிறார். கிட்டத்தட்ட அவரின் மகள் திருமணம் நடக்கவே விஜய் தான் காரணம். ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்திற்கு விஜய் செல்ல அங்கு கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் காதல். அவரிடம் காதலை சொல்லபோகும் நேரத்தில் தான் கீர்த்தியை சுற்றி பல பிரச்சனைகள் இருப்பது தெரிய வருகிறது. தன் காதலியின் பிரச்சனை தனக்கு வந்த...