May 23, 2018
செயல்- எதிர்பாராமல் அடித்த இன்ப புயல்! திரைவிமர்சனம்,
May 23, 2018<
நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!மார்க்கெட் ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கிற சமக் சந்திரா, தனது அல்லக்கைகள் சகிதம் மாமூல் வசூலில் கொடி கட்டி பறக்கிறான். ஏதோ ஒரு வேலையாக மேற்படி மார்க்கெட்டுக்குப் போகும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் சம்பந்தமில்லாமல் தன்னிடம் முண்டா தட்டும் சமக்கை போட்டு புரட்டி எடுக்க…. ஏரியாவே துவம்சம் ஆகிறது. அதுவரை அலறிக் கொண்டு மாமூல் கொடுத்தவர்கள் எல்லாம், “போங்கடா… உங்க அண்ணன் ஒரு சின்ன பையன்ட்ட அடி வாங்குனவன்தானே?” என்று வில்லனின் அடியாட்களை துரத்தி துரத்தி அவமானப்படுத்துகிறார்கள்.“அண்ணே… அதே ஏரியாவுல அவனை வச்சு தூக்கலேன்னா நமக்கு மாமூலும் இல்ல. மரியாதையும் இல்ல”...