June 27, 2017
<
திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும். இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை காண்போம்.தாய் என்பவள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியவள். உங்களை பெற்றெடுக்க சரியான தூக்கம் இன்றி உணவின்றி தவித்தவள். பொதுவாக எல்லா தாய்களுக்குமே தனது மகன் திருமணத்திற்கு பிறகு தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என்ற பயம் இருக்கும். இதை சில தாய்கள் சமன் செய்து நடந்துகொள்வார்கள். சிலர் இதில் தடுமாறுவார்கள். தாயின் இந்த நிலையை புரிந்து நடந்துகொள்வது மகன் மற்றும் மருமகளின் கடமை.மனைவி என்பவள் உங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள அவரின் சொந்த வீட்டை விட்டுவிட்டு உங்களை நம்பி மட்டுமே உங்களுடன் வந்தவர். உங்களது வாழ்க்கை முழுவதும்...
June 27, 2017
அதுக்கு ஒத்துவரமாட்டார், ஸ்ரீதேவியை ஓரம் கட்டிய ராஜமவுலி
June 27, 2017பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்...
<
பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால், ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று விளக்கமளித்த ஸ்ரீதேவி, இந்தப்படத்தில் நடிக்க அணுகியபோது, சொந்த விஷயங்களில் பிஸியாக இருந்து விட்டேன். ஆகியால் பாகுபலியில் என்னால் நடிக்க முடியவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து ராஜமவுலி தரப்பினர் கூறும்போது, இந்தப்படத்தில் சிவகாமி கேரக்டர் ஒரு பாத்திரம் மட்டுமே. இந்தக் கேரக்டரில் குறிப்பிட்ட இவர்தான் நடிக்க வேண்டும் என மனதில் கொள்ளவில்லை. ஆனால், படத்தொடக்கத்தின் போது இந்தப்பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணனைத் தான் மனதில் வைத்திருந்தோம். இருப்பினும் பாலிவுட் ஆடியன்ஸை கவர அங்கிருந்து ஒரு நடிகையை பயன்படுத்தலாமா எனத் தோன்றியது.ஆனாலும் சிவகாமி பாத்திரத்திற்கு ரம்யாகிருஷ்ணன் மட்டுமே பொறுத்தமாக இருப்பார் என்பதில் உறுதியாக் இருந்தோம். ஸ்ரீதேவி மிகப்பிரபலமான நடிகையாக இருந்தாலும் சிவகாமி பாத்திரத்திரத்துக்கு அவர் பொறுந்தி இருக்க மாட்டார். சிவகாமி...
June 27, 2017
பிக் பாஸ்! முதல் நாளில் ஆர்த்தி-ஜூலி இடையே சண்டை
June 27, 2017இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு...
<
இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டது. முதல் நாள் என்பதால் யார் யார் எங்கு தூங்குவது என பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது டபுள் பெட்டில் தூங்குவது யார் என ஆர்த்தி மற்றும் ஜல்லிக்கட்டு பொண்ணு ஜூலிக்கும் இடையே பிரச்சனை வந்தது."என் சைஸ்கு சிங்கிள் பெட்டில் படுக்க முடியாது, எனக்கு டபுள் பெட் வேணும்" என ஆர்த்தி அடம்பிடிக்க, ஜூலியோ நமிதா அருகில் காலியாக இருக்கும் இடத்திற்கு செல்ல முடிவெடுத்துவிட்டார்.ஆனால் கடைசியில் ஒருவழியாக ஜூலியும், ஆர்த்தியும் சமாதானமாகி ஒரே 'பெட்'டை ஷேர் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். ...
June 27, 2017
சூர்யாவிடம் வந்து நின்ற இறுதிச்சுற்று!
June 27, 2017பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்ப...
<
பெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண்ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்பார்கள் என்கிற பழைய பதிவேடுகளை, புதிய நடைமேடைகளாக மாற்றியவர் சுதா கொங்கரா. அவரது ‘இறுதிச்சுற்று’ படத்தை ஒரு ஆண் இயக்கியிருந்தால் கூட அப்படியொரு பினிஷிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!அப்படியொரு திடுக்கிடும் வெற்றியை தமிழ்சினிமாவில் அள்ளிக் கொடுத்த சுதாவுக்கே, அடுத்தடுத்த படங்களில் அவ்வளவு குழப்பம். இறுதி சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்காக சென்னை வந்திறங்கிய அவருக்கு, தன் கதையை யாரிடம் சொல்லி கால்ஷீட் பெறுவது என்பதில் ஏகப்பட்ட தயக்கம். குழப்பம். முதலில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். என்ன குழப்பமோ, அதற்கப்புறம் அவர் போன இடம் சிவகார்த்தியேன் ஆபிஸ். அங்கும் கதை சொல்லி அசத்தியவருக்கு ஏனோ, விழுந்தது ரெட் சிக்னல்.தற்போது சுதாவை “வாங்கம்மா வாத்தியாரம்மா” என்று வரவேற்று உபசரித்த இடம் சூர்யாவின் இல்லம் என்கிறார்கள். அநேகமாக சுதாவின்...
June 27, 2017
அண்டாவுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி!
June 27, 2017சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வேல்மதி இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'. 'திமிரு...
<
சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வேல்மதி இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'அண்டாவ காணோம்'. 'திமிரு' படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற ஸ்ரேயா ரெட்டி, ஒன்பது ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், சில நாள்களுக்கு முன்புதான் வெளியானது. நேற்று, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அண்டா பேசும் காட்சிகளுக்கு அண்டாவாக விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பி.வி.சங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, அஸ்வமித்ரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
June 27, 2017
நாசா வெளியிட்ட 'நிஜ' சனி புகைப்படம்! #Cassini
June 27, 2017அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சனிக்கோள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுப் பயணத்...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சனிக்கோள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக 1997-ம் ஆண்டு கெசினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுப் பயணத்துக்குப்பின், 2004-ம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையை கெசினி விண்கலம் அடைந்தது. சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த நிறைய தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது. அவ்வப்போது நாசா இதை வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப்புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றி பனிப்படலம் போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.சனிக்கோளுக்கும் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)