April 16, 2018
எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா யாரையும் திருமணம் செய்ய மாட்டாராம் - புதுதகவல்
April 16, 2018 புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 16 பெண்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 3 பெண்களாக குறைந்து, அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 17 இந்நிகழ்ச்சியின் கடைசி ஒளிபரப்பில், ஆர்யாவின் மணமகள் யார் என்று தெரியவரும். அதற்கு இரு தினங்களே உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியைக் குறித்த தகவல்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்ட 13 பெண்கள் எலிமினேட் ஆன நிலையில், தற்போது அகாதா, சுசானா, சீதாலட்சுமி ஆகிய 3 பெண்கள் மட்டுமே போட்டியில் தொடர்கிறார்கள். இவர்களில் ஒருவரை மட்டும் தான் ஆர்யா திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில், மூவருமே திருமண ஆடைகளைத் தேர்தெடுத்து கிட்டத்தட்ட தாங்கள் தான் தேர்வாகப் போகிறோம் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர்....