June 27, 2018
234 தொகுதியிலேயும் நிற்பேன்! விஜய் எச்சரிக்கை!
June 27, 2018<
காலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசனும்! எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக்கு பின் சினிமாவிலிருந்து யாராலும் அரசியலில் வென்று ஆட்சி மெத்தையில் உருள முடியாது என்ற கருத்து தானாக கிளம்பியதா, அல்லது கிளப்பி விடப்பட்டதா? என்பதெல்லாம் பூதக்கண்ணாடிக் கேள்விகள்.அதை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்றால், இருக்கிற இடமே இதமாக இருக்கிறது. இதைவிட்டு அதை முயல்வது அநாவசியம் என்று இரு மனதாக இருந்தார் விஜய். ஆனால் இவருக்கு முன் அரசியலில் திடீர் குதியல் போட்ட ரஜினியும் கமலும் விஜய்க்கு ஒரு தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம். சம்பந்தப்பட்ட இருவரும் தேர்தலில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுவரை யுத்த களத்தை சூடாக வைத்திருக்க வேண்டுமே? அதற்காகவும் சில பல டயலாக்குகளை தன் படங்களில் சேர்த்து வருகிறார் விஜய்.‘சர்க்கார்’ படத்தில் அப்படியொரு டயலாக் இருக்கிறதாம். கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள்.“நான் ஒரு தொகுதியில்தான்...