March 22, 2018
4,500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் மொழி! - ஆய்வில் தகவல்
March 22, 2018<
இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திராவிட மொழிதிராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுகிறது இதை தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள மக்களே அதிகம்பயன்படுத்துகின்றனர். திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியமொழிகள் உள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் மிகவும் தொன்மைவாய்ந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. ஆனால், தமிழ் தன்னுடைய பழைமையை இப்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.தற்போதை விட முன்னாள் இருந்த காலகட்டங்களில் திராவிட...