July 23, 2019
மோடி மடியில் ஒரு குட்டி பாப்பா.. பொக்கை வாய் சிரிப்புடன்... அடடே யாருப்பா அது!
July 23, 2019 பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கையால் அலேக்காக பிடித்தபடி கொஞ்சும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.எப்போதுமே கெத்து & கலர்புல் & கண்டிப்புடன்தான் இதுவரை நாம் பிரதமர் மோடியை பார்த்திருக்கிறோம். ஒன்றிரண்டு முறை அமித்ஷாவின் பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதையும் கண்டுள்ளோம்.இப்போது ஒரு குழந்தையை கொஞ்சுகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையுடன் இருக்கும் 2 போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை யார், என்ன என்ற விவரத்தை மோடி சொல்லவில்லை. ஆனால், "ரொம்பவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்" என்று ஒரு கேப்ஷன் போட்டுள்ளார்.குழந்தையை மடியில் போட்டு அளவளாவி கொஞ்சுகிறார் மோடி. குழந்தை யாருடையது என்று தெரிவதற்கு முன்னேயே அந்த போட்டோக்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துவிட்டார்கள். கூடவே, இந்த குழந்தை யாருடையது என்று...