June 14, 2018
கோலி சோடா 2 திரை விமர்சனம் - ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும்.
June 14, 2018<
விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.கதைக்களம்சமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல்...