July 01, 2017
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு எவ்வளவு? அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
July 01, 2017<
நாட்டை திருத்துவதற்காக அரசியலுக்கு வரப்போவது போன்று தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.நடிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அர்ஜுன் சம்பத், அதிமுகவின் வெற்றிவேல் உள்ளிட்ட அரசியல் சாணக்கியர்களை அழைத்துப் பேசி அரசியலுக்கு வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறாராம் இந்த யோக்கியர்.தமிழ்நாட்டின் சிஸ்டத்தை சரி செய்வது தான் இவரது நோக்கமாம். அடக்கடவுளே… சிஸ்டத்தை சரி செய்வது பற்றியெல்லாம் யார் பேசுவது என்று விவஸ்தை இல்லையா? சீர்திருத்தங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது.ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்துக்கு உண்மையான கணக்கு காட்டியிருக்கிறாரா? கணக்கு காட்டிய பணத்துக்கு முறையாக வரி செலுத்தியிருக்கிறாரா? ரஜினியை வைத்து திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளர்களை விசாரித்தால் தெரிந்து விடும்.66 வயதாகும் ரஜினிகாந்த் இதுவரை 160 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் முதல் 100 படங்களுக்கு அவரது ஊதியம் ஒரு...