­
03/25/18 - !...Payanam...!

இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஒ...

<
இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று கூறியுள்ளார்.இது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி இளையராஜாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்த சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ...

Read More

”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்” என தூத்துக்குடியில் ஸ்டெர...

கமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது. மதுரைய...

<
கமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது.மதுரையில் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கட்சியின் பெயரையும் வெளியிட்டு பேசினார். இதற்கு பெருமளவில் மக்கள் கூட்டம் வந்ததை பார்க்கமுடிந்தது.அவரின் அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4 ம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி பொன்மலை கிரவுண்ட்டில் இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருகிறது.மேலும் கமல் இதற்காக சென்னையிலிருந்து அவர் வரும் 3 ம் தேதி மதியம் 1.40 மணிக்கு ரயிலில் பயணத்தை துவங்கி வழி நெடுக ரசிகர்களை சந்திக்கவுள்ளாராம். ...

Read More

நடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத...

<
நடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத்தில் வந்த அவரின் படங்களும் வெற்றி பெற்றன.இந்நிலையில் அவர் தெலுங்கில் தேஜா இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம்.இதில் என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல என்.டி.ஆரின் மனைவி பசவதாராம் ஆக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறாராம்.இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். ...

Read More

தற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது ச...

<
தற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது சன் டி வி யில் ஒளிபரப்பாகி வரும் சன் சிங்கர்.இந்நிகழ்ச்சி இன்று பைனல் ஷோ டி வி யில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் தனது சின்ன சின்ன அசைவால், பாடும் திறமையால் அதுவும் இந்த சின்ன வயதில் அசத்திய அனன்யா தான் சன் சிங்கரின் முதன்மை வெற்றியாளராக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்.இதனையடுத்து இரண்டாவது இடத்தில் பூர்ணா வெற்றி பெற்றுள்ளார். ...

Read More

உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர...

<
உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு.எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு திராட்சை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.திராட்சையில் உள்ள சத்துக்கள்?திராட்சை பழத்தில் சர்க்கரைச்சத்து, கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.திராட்சை பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது?திராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புத் தன்மை கிடைக்கும்.    எனவே இப்பழங்களை இரவில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதனால் துக்கமின்மை ஏற்படும்.யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழம் மற்றும் மற்ற பழங்களை...

Read More

Search This Blog

Blog Archive

About