August 16, 2018
ஜெயலலிதாவாக நடிக்கும் வித்யாபாலன்?
August 16, 2018<
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகையாக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக கட்சியை வழிநடத்தி 6 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். மிக நீண்ட திரைப்பயணமும் அரசியல் பயணத்தையும் கண்ட ஜெயலலிதா கடந்த 2016 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார்.இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. இப்படத்தை விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா தயாரிக்கிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகை...