July 01, 2019
ஃபேஸ்புக்கில் லைவ்வான யோகி பாபுவின் தர்மபிரபு: அதிர்ச்சியில் படக்குழு?
July 01, 2019<
வடிவேலு, விவேக், சூரி வரிசையில் எத்தனை படங்களில் நடித்து வருகிறேன் என்று அவருக்கே தெரியாத வகையில் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. இப்போது எல்லாம், சந்தானம், விவேக், சூரி, ரோபோ சங்கரை யாரும் தேடுவதில்லையாம், வேர் இஸ் யோகி பாபு என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றால் அது மிகையாகாது. ஒரு நிகழ்ச்சியில் வந்து வணக்கம் என்று சொல்லத் தொடங்கினால் போது, ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்கும்.அப்படியிருக்கும் யோகி பாபு ஹீரோவாக, அதுவும் எமதர்மனாக நடித்த படம் தர்மபிரபு. கடந்த 28ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ரேகா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தமிழக அரசியலை கலாய்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் அண்மையில் வெளியான இப்படத்தை யாரோ...