­
03/28/18 - !...Payanam...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் முதல் அனைத்து நடிகர்களுக்கு பட்டப்பெயர் உண்டு. தங்களது பெயருக்கு மேல் மாஸ்ஸாக ஒரு பெயர் போட்...

<
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் முதல் அனைத்து நடிகர்களுக்கு பட்டப்பெயர் உண்டு. தங்களது பெயருக்கு மேல் மாஸ்ஸாக ஒரு பெயர் போட்டுக்கொள்வார்கள்.அந்த வகையில் மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த விஜய் சேதுபதிக்கு தர்மதுரை மூலம் மக்கள் செல்வன் என்ற பட்ட பெயரை வைத்தார் இயக்குனர் சீனு ராமசாமி. இதனையடுத்து சமீபத்தில் 'கண்ணே கலைமானே' படத்தை முழுவதுமாக பார்த்த சீனுராமசாமி தனது டுவிட்டரில் 'கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத் தோன்றியது' என்று கூறியுள்ளார்.எனவே விஜய்சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' பட்டம் நிலைத்தது போல் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற பெயர் நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் உதயநிதி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . ...

Read More

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜமௌலி. பாகுபலி இரண்டு பாகமும் பல உலகதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட...

<
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜமௌலி. பாகுபலி இரண்டு பாகமும் பல உலகதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு எஸ் எஸ் ராஜமௌலி கவுரவிக்கபட்டர்.இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஜமெளலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'பாகுபலி திரைப்படம் எனக்கு உலகின் பல நாடுகளுக்கு செல்ல உதவியது. இதில் பெரும் உற்சாகத்துக்குரிய விஷயம் என்னவெனில் பாகிஸ்தானில் இருந்தும் அழைப்பு வந்ததுதான்.கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு எனது நன்றிகள் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார். ...

Read More

விடிஞ்சா எங்க போறது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் அநேக நடிகர்கள். வசதியாக இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு பேக்கப் ஆகிக் கொண்டிர...

<
விடிஞ்சா எங்க போறது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் அநேக நடிகர்கள். வசதியாக இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு பேக்கப் ஆகிக் கொண்டிருக்க… நடுத்தர நடிகர்களுக்குதான் நாக்கு தள்ளுகிறது. எல்லாம் இந்த சினிமா ஸ்டிரைக்கின் கைங்கர்யம்.இந்த நிலையில்தான் வெளிநாட்டுக்கும் போக முடியாமல், உள் நாட்டிலும் பொழுது போகாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக இவர் நடத்தி வந்த கல்யாண வேட்டைக்கும் கத்தி போட்டுவிட்டார்கள். யெஸ்… இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்துக்கே போய்விட்டார் ஒருவர். அதன் காரணமாக சின்னத்திரை ஷுட்டிங்கும் இல்லை. இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு யோசனை சொன்னாராம் ஆர்யா.‘யாரும் படப்பிடிப்பு இல்லாம சும்மாதானே இருக்கோம். நடிகர் நடிகைகளை வச்சு சென்னையிலேயே ஒரு ஸ்டார் நைட் நடத்தினா, செலவெல்லாம் போக ஐந்தாறு கோடி கிடைக்குமே? அதை தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்தலாமே’ என்று சொல்ல…. ஆர்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாட...

Read More

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இவர் வீட்டின் வாசலிலேயே காத்திருக்கின்றனர். ஆனால்,...

<
ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இவர் வீட்டின் வாசலிலேயே காத்திருக்கின்றனர்.ஆனால், ஷங்கருடன் இரண்டு படத்தில் பணியாற்றி விட்டார் விக்ரம், இந்த இரண்டு படங்களுக்குமே அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.இந்த நிலையில் காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் கொடுத்ததே விக்ரம் தான், அப்போது டப்பிங் முடிந்தவுடன் ஷங்கரிடம் ‘சார் உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள்’ என்று விக்ரம் கெஞ்சியுள்ளாராம்.அப்போது விக்ரம் கூட நினைத்திருக்க மாட்டார், இரண்டு படங்களில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்போம் என்று.இன்று ஷங்கரே தான் நாயகர்களில் விக்ரம் மிகவும் சிறந்தவர் என்று பாராட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். ...

Read More

நடிகர் பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். மேலும் அப்படத்தில் நடித்தவர்களில் அவருக்கு தான் அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்ட...

<
நடிகர் பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். மேலும் அப்படத்தில் நடித்தவர்களில் அவருக்கு தான் அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டது. படத்திற்கு நல்ல வரவேற்பும், விருதுகளும் கிடைத்து.சஹோ என்ற ஆக்‌ஷன் படத்தில் அடுத்து நடித்து வருகிறார். மேலும் பாகுபலி படத்தின் ஸ்பெஷலாக உலகின் புகழ்பெற்ற Madame Tussauds அருங்காட்சியகத்தில் இடம் பெற்றார்.ஏற்கனவே ஷாருக்கான், அமிதாப் பச்சன், மோடி என பலருக்கும் அங்கு சிலை உள்ளது. சமீபத்தில் பிரபாஸ்க்கும் அங்கு மெழுகாலான சிலை வைக்கப்பட்டது. மேலும் இங்கு பல உலக பிரபலங்களின் சிலைகளும் உள்ளது.ஆனால் வருபவர்கள் எல்லாம் பிரபாஸ் பக்கம் தான் நிற்கிறார்களாம். அங்கு பிரபாஸ் சிலையுடன் போட்டோ எடுப்பவர்கள் தான் மிக அதிகம் என ஊழியர்கள் கூறியுள்ளனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About