­
12/12/16 - !...Payanam...!

காங்கிரஸ், ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்து தகவல்களை லீக் செய்த ஹேக்கர் குழுவின் பெயர் Legion. இவர்...

காங்கிரஸ், ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்து தகவல்களை லீக் செய்த ஹேக்கர் குழுவின் பெயர் Legion. இவர்கள் அப்போலோ மருத்துவமனையின் சர்வர்களைக் கூட ஹேக் செய்துள்ளார்களாம். ஆனால், தகவல்களை லீக் செய்தால், இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளனர். இவர்களுடைய அடுத்த டார்கெட் லலித் மோடியாம்! ...

Read More

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடிய...

<
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடியின் மிரட்டலை அடுத்தே திடீரென பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளிவந்துள்ளது. இது உண்மை என்றால் தமிழகத்தை மன்னார்குடி மாஃபியாக்களில் இருந்து மோடி காப்பாற்றியதற்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். இதோ அந்த பதிவு 5-12-2016 (நேற்று முன்தினம்) “மன்னார்குடி மாஃபியா” நரேந்திர மோடி என்றால் யார் என்று புரிந்துக் கொண்டது. மாலை 5:05 PM : அதிமுக எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வத்தை மட்டும் தவிர்த்து விட்டு அப்பல்லோவில் சந்திக்கிறார்கள். சசிகலாதான் அதிமுக தலைவர் என்று தேர்ந்தெடுக்கவும், சசிகலா குடும்பத்தின் நெருங்கிய தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்படுகிறது மாலை 5:45 PM: தில்லியில் இருந்து வரும் ஒரு அழைப்பு சசிகலா & கோ வின் இந்த...

Read More

ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூ...

<
ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூட அனுபவிக்க முடியாமல் துவக்க நிலையிலேயே டக் அவுட் ஆக வைத்தது விதி. தொடர்ந்து அதிமுக வின் பிரச்சார பீரங்கியாக இருந்த ராமராஜனுக்கு, சாண் ஏறினால் முழம் சறுக்குகிற அளவுக்குதான் அமைந்தது எல்லாமே! மளமளவென அம்மாவின் மனதில் மீண்டும் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அந்த பலத்த ஆக்சிடென்ட். கார் விபத்தில் சிக்கி படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை சென்னைக்கு வரவழைத்து, அப்போலோவின் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தார் ஜெ. மொத்த செலவையும் முதல்வரே ஏற்றுக் கொண்டது, ராமராஜன் மீது அவருக்கு இருந்த அன்பிற்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு. அப்படியெல்லாம் உயிர் பிழைத்து வந்தாலும், கழகமும், தலைமையும் ஏனோ அவருக்கு ஒரு பதவியும் தராமல் வைத்திருந்தது. அண்மையில் வந்த சட்டமன்ற தேர்தலில் கூட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக...

Read More

தமிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில்...

தமிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி...

Read More

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம...

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. 'பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து 75 நாட்கள் நடந்து வந்த சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 5-ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "தனிநபர் விருப்பத்தையும் தாண்டி மக்கள் பணி பாதிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உடல்நிலை குறித்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. பல கேள்விகளுக்கு பதிலே சொல்லப்படவில்லை" என...

Read More

Search This Blog

Blog Archive

About