தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்ட...

<
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும்,  தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.  இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் பலஅரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறன். ஜல்லிக்கட்டு...

Read More

Search This Blog

Blog Archive

About