January 05, 2019
மோடியின் வாழ்க்கையும் படமாகிறது: அஜித் வில்லன் தான் 'நமோ' #PMNarendraModi
January 05, 2019பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வர...
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்தியில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையையும் படமாக்குகிறார்கள்.
விவேக் ஓபராய்
நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். படத்திற்கு பி.எம். நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமங் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் துவங்குகிறது.
முதல்வர்
பி.எம். நரேந்திரமோடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. போஸ்டரை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்
ஃபட்நாவிஸை வைத்து போஸ்டரை வெளியிடலாம் என்று நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பளர் சந்தீப் சிங் மற்றும் விவேக் ஐடியா கொடுத்தார்களாம். போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடக்கிறது. அன்றைய தினமே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர்
மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அனுமதி கிடைத்ததாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை குஜராத்தில் ஷூட் செய்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மோடியின் வாழ்க்கையும் படமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.