June 06, 2019
ஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்!
June 06, 2019<
ஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டிவரும் அதிரடிகள்தான் காரணம் என்கிறார்கள் மக்கள். மத்திய அரசுக்கு முன்னதாகவே விவசாயிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கும் காலியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மாணவர்களுக்கு, பெண்களுக்கு வட்டியில்லாக் கடன், பழங்குடியினர் நலத்திட்டங்கள், உணவு தன்னிறைவு, தரமான வீடுகள் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் குறையின்றி பூர்த்தி செய்திருக்கிறார். ஊழலற்ற ஆட்சி இவரது தனித்துவமான வெற்றி என்கிறார்கள். ஊழல் புகார் எழும் பட்சத்தில் யாராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிகிறார் நவீன். 2019-ம் ஆண்டின் ஒடிசாவின் சட்டமன்ற, நாடாளுமன்ற இரு தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 29-ம் தேதி ஐந்தாவது முறையாக அரியணை ஏறியிருக்கிறார். இந்த முறை அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி. 33 சதவிகிதம்...