­
11/16/17 - !...Payanam...!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாரு...

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்...

Read More

ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிவதுச் சாதரணம் தான். அந்த வகையில் சமீபத்தில் தோர் படத்தின் மூன்றாவது பாகம் திரைக்கு வந...

<
ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிவதுச் சாதரணம் தான். அந்த வகையில் சமீபத்தில் தோர் படத்தின் மூன்றாவது பாகம் திரைக்கு வந்தது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றது, இந்தியாவில் மட்டுமே ரூ 60 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் Thor: Ragnarok உலகம் முழுவதும் ரூ 4430 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. ...

Read More

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்...

<
நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல்...

Read More

சென்னையில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து பெண்மணி ஒருவர் தலைமையில் நூதன மோசடி செய்யும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல...

<
சென்னையில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து பெண்மணி ஒருவர் தலைமையில் நூதன மோசடி செய்யும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் செயல்படும் இந்த மோசடி கும்பலின் தலைவியாக உள்ள 40 வயது பெண்மணியின் பெயர் தனலட்சுமி. அறந்தாங்கியை சேர்ந்தவரான இவர், குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருவதாக கூறிக்கொள்கிறார். இவரிடம், சங்கர் (47) – மாலதி (42) என்ற சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தம்பதி ஏமாந்துள்ளனர். சங்கர் இதுபற்றி கூறுகையில், பத்திரிகை ஏஜெண்டாக பணியாற்றும் எனக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நாங்கள் எடுக்காத முயற்சியே இல்லை. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது. எங்களுக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர், நிறைமாத கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். அந்த இளம்பெண்...

Read More

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கிற தலைப்பில் கடந்த சில நாட்களாக “வாட்ஸ் அப்“ பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியை வழக...

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கிற தலைப்பில் கடந்த சில நாட்களாக “வாட்ஸ் அப்“ பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியை வழக்கமாக சமூகத்தின் நலனுக்காக ஷேர் செய்யப்படும் விழிப்புணர்வு செய்தி என்று நீங்கள் கடந்து விட முடியாது. காரணம் அது ஒவ்வொரு தனி மனிதனின் நேரடியான நலன் சார்ந்தது. குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ். பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தரு கிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால்...

Read More

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய...

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய்வீக சக்தி கொண்டவள் மற்றும் மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று அனைத்து குறிப்புகளிலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக சிறப்பிக்கப்படுகிறார். இவருடைய பதிவிரத்தின் காரணமாகத் தான் அசுர குணம் படைத்தவராக கருதப்பட்டும், பல்வேறு தவறான செயல்களைச் செய்தவராக கருதப்பட்டும் வரும் இராவணனின் தீஞ்செயல்களுக்கான தண்டணைகள் அல்லது பாவங்கள் சுத்தம் செய்யப்பட்டன. மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள். மிகவும் திறமை பொருந்திய பொறியியல் கலைஞராக விளங்கிய மாயாசுரனின் இருப்பிடத்திற்கு ஒருமுறை வந்திருந்த இராவணன், அவரிடம் தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்த நேரத்தில் தான் இராவணன் மண்டோதரியைக் கண்டதும் காதல் கொண்டார். இராவணன், மண்டோதரியின்...

Read More

உடல்பருமன், நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரிய பிரச்னை. உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவேற்கும் வாசல். அதிக ...

<
உடல்பருமன், நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரிய பிரச்னை. உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவேற்கும் வாசல். அதிக அளவில் பெரியவர்களைப் பாதித்துக்கொண்டிருந்த இந்தப் பிரச்னை, இப்போது குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. `உடல்பருமன் குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா’ இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல்பருமனோடு இருக்கிறார்கள். சரி.. உடல்பருமன் எப்படி ஏற்படுகிறது. நம் உடல் இயக்கத்துக்கு உதவும் கொழுப்பு, உணவின் மூலமாகத்தான் கிடைக்கிறது. உணவின் வழியாக நமக்குக் கிடைக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் தேங்கும்போது உடலின் தோற்றமே மாறிவிடும். அந்தக் கூடுதல் கொழுப்பினால்தான் நாம் உடல்பருமன் பிரச்னையை எதிர்கொள்கிறோம். ``நம் உடலில் இருக்கும் இன்னொரு கொழுப்பே உடல் எடை குறைப்பதற்கும் உதவும் என்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர் பிரௌன் ஃபேட் (Brown Fat)’’ என்கிற பிசியோதெரபிஸ்ட் ரம்யா,...

Read More

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு...

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க, பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவிவந்தது.இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இன்று ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில், இந்த...

Read More

சுமார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏ...

<
சுமார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். வடிவேலுவும் வேணாம்… அவரது வானளாவிய நடிப்பும் வேணாம்… கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்கிக் கொடுத்தா போதும் என்கிற குறைந்தபட்ச குமுறலுடன் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். அங்குதான் அவருக்கு முட்டு சந்தில் சிக்கிய மூச்சு முட்டல். ஏன்?“நடிகர்கள் மீதான எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் நான் தலையிட முடியாது. நீங்களே பார்த்துக்கோங்க” என்று சங்கத்தின் செயலாளர்களான ஞானவேல்ராஜா, மற்றும் கதிரேசனிடம் பிரச்சனையை தள்ளிவிடுகிறாராம் விஷால்.குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் விட மாட்டேன் என்று முழங்குவதுதானே ஒரு தலைவனுக்கு அழகு? அப்படியிருக்க ஏன் விஷால் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? இந்த வருத்தம் ஷங்கருக்கு இருந்தாலும், பிரச்சனை தீர்ந்தால் சரி என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இந்த பிரச்சனை இப்போது...

Read More

சூர்யா கார்த்தி, சிம்பு குறளரசன், தனுஷ் செல்வராகவன், யுவன் கார்த்திக் ராஜா, என அண்ணன் தம்பிகளின் அன்பு பாச கூட்டணிக்கு குறிப்பிட்ட உதாரணங்க...

<
சூர்யா கார்த்தி, சிம்பு குறளரசன், தனுஷ் செல்வராகவன், யுவன் கார்த்திக் ராஜா, என அண்ணன் தம்பிகளின் அன்பு பாச கூட்டணிக்கு குறிப்பிட்ட உதாரணங்கள் பலவுண்டு. அந்த வரிசையில் பிரேம்ஜி-வெங்கட்பிரபுவை விட்டுவிட்டு யோசிக்கவே முடியாது! இந்த ‘மாலை நேரத்து மப்பு பிரதர்ஸ்’ மற்றவர்களுக்கு ரோல் மாடல் ஆனது எப்படி என்பதை நினைத்தால் நமக்கு தலை சுற்றுமா, சுற்றாதா? ஆனால் வழக்கம் போல இதை டேக் இட் ஈஸியாக்கிவிட்டு போனார் வெங்கட்பிரபு.இந்த அன்பு அண்ணன் அரங்கத்தை கலகலப்பாக்கிய இடம், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா.படத்தின் ஹீரோவான கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாதன் தம்பிக்காக தயாரித்த படம்தான் இது. இந்த விஷயத்தை சொல்ல வந்த எல்லாரும், ‘வெங்கட் பிரபு எப்படி தன் தம்பி பிரேம்ஜி மீது அன்பு வச்சுருக்காரோ… அப்படி’ என்று சொல்ல சொல்ல, முன் வரிசையில் இருந்த வெங்கட்பிரபுவுக்கு சிரிப்போ சிரிப்பு. மைக்கை பிடித்தவர், ‘எங்களை...

Read More

எவ்வளவுதான் உருவிவிட்டு அடித்தாலும் பாலா அடியை பல்லிளித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிற ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கதான் செய்கிறார்கள்....

<
எவ்வளவுதான் உருவிவிட்டு அடித்தாலும் பாலா அடியை பல்லிளித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிற ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கதான் செய்கிறார்கள். (லட்சம் ஆயிரமா குறைஞ்சுருச்சே என்கிற வருத்தம் இல்லாமலில்லை) பாலா பழசாயிட்டாரு. அவரை விட பழசாயிருச்சு அவரது படங்கள் என்ற உண்மையை அவரது முந்தைய படக் கலெக்ஷன்கள் கூறிவிட்டன.நானும் சரி… என் படங்களும் சரி. டைட்டில்தான் வேற வேற. ஆளும் படைப்பும் அதேதான் என்கிற மாதிரி வந்திருக்கிறது பாலாவின் நாச்சியார் டீஸர். இதற்கு முன் இவரது படங்களில் வந்த சூர்யா, விக்ரம், விஷால், மாதிரிதான் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷும். அதே போலொரு சைக்கோ லுக் வேறு.ஒரு வித்தியாசமும் இல்லையேப்பா… என்று ஒரு முடிவுக்கு வருகிற நேரத்தில், அதை இன்னும் உர்ஜிதப்படுத்துகிற மாதிரி, அருமை ஜோதிகாவின் வாயிலிருந்து தேவிடியா பயலுகளா என்கிற வார்த்தை வேறு. (இதை தேவையில்லாத பயலுகளா என்று சென்சாரில் மாற்றிக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)நேற்றிலிருந்தே, சிவக்குமார் பேமிலிக்கு இது தேவையா...

Read More

Search This Blog

Blog Archive

About