­
11/20/16 - !...Payanam...!

மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்க...

மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை மண்ணாக்கி, மண்ணை கூழாக்கிக் கொடுத்தாலும், ‘குடிச்சிர்றேன் சாமிய்’ நிலைமையில்தான் இருக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் மகனில் துவங்கி, சத்யராஜ், பாக்யராஜ் மகன்களுக்கும் கண்டம் சரியில்லை. இந்த நேரத்தில், நம்ம ‘எப்போதும் இளமை’ முரளியின் மகன் அதர்வாவின் நிலைமை என்ன? அவர் நடித்து ‘ஈட்டி’ என்கிற ஒரே ஒரு படம்தான் ஹிட். ஆனாலும் மார்க்கெட்டில் தெம்பாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிற அளவுக்கு அழைப்புகளும், வியாபாரமும் இருந்து வருவது அதிசயத்திலும் அதிசயம். இந்த நிலையில்தான், அதர்வாவுடனும் ஜோடி போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் த்ரிஷா. ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து அதர்வா வெளியே வருகிற நேரத்தில் உள்ளே என்ட்ரி ஆனாராம் த்ரிஷா....

Read More

தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ...

தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இப்போதுள்ள டெக்னாலஜியில் இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல் அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக  இந்த ஒளி பரவுகிறது. அதனால்  ...

Read More

வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏன...

<
வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏனென்றால், வாட்ஸ்-ஆப் நிறுவனம் அதை அனுப்பவதில்லை. உங்களிடம் இருந்து விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம். வாட்ஸ்-ஆப் நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது. வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று,...

Read More

இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்க...

இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இதை வேறு விதமாக எதிர்கொள்கிறது. ஹாவ்பங், இந்திய-மியான்மர் எல்லையில் இருக்கும் மிசோரம் மாநில கிராமம். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கூடுதலாகவே இங்கு ரூபாய்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் வங்கிகள்,அஞ்சலங்கள், ஏடிஎம் போன்றவை ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ள மாநிலம் இது. ரூபாய் தட்டுப்பாட்டை அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பூட்டான் நாட்டு தாளை பயன்படுத்தி சமாளித்து வரும் நிலையில் மிசோரம் மக்கள் கைகளில் எழுதிய தாள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.   விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த கிராமத்தில் ரூபாய்தாள்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பின் 7 நாட்கள் வரை காத்திருந்துள்ளனர். இந்த தேக்க நிலை மாற இன்னும் பல நாட்கள் ஆகும் என தெரியவரவும் தங்கள் ஊருக்குள் மட்டுமே...

Read More

           கறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது...

<
           கறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கணக்கில் வராத கறுப்பு பணத்தை பிறரது வங்கி கணக்கில் செலுத்தினால் இந்த நடவடிக்கை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 8-ஆம் தேதிக்கு பிறகு கணக்கில் வராமல் ரூ.200 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வருமானவரித்துறை கண்டறிந்ததாகவும், இதையடுத்து பல அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெய்டுகள் மூலம் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.            கறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கணக்கில் வராத கறுப்பு பணத்தை பிறரது வங்கி கணக்கில் செலுத்தினால் இந்த...

Read More

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின...

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப்படத்தில் வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு, இந்தியா மங்கள்யானை விண்ணில் ஏவிய போது, ஆறு மாத காலமே அது தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அது மூன்று ஆண்டுகளையும் தாண்டி ஆராய்ச்சி பணியை செய்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைந்த விலையில் உருவாக்கி செலுத்தப்பட்ட மங்கள்யானில், மிகக் குறைந்த விலையிலான கேமராவே பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான், தற்போது நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில் வெளிவந்துள்ளது. இதுவரை செவ்வாய் கிரகத்தின் தரமான புகைப்படம் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் எடுத்த புகைப்படம் தரமாக இருக்கவே தான் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் அதை அட்டைப்படத்தில் பயன்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.  ...

Read More

Search This Blog

Blog Archive

About