­
06/25/17 - !...Payanam...!

உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss. 14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிர...

உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss.14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள்ள எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும்.இதில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் யாரென்று சில தகவல்கள் தவறாக பரவியது. தற்போது இன்று இந்த நிகழ்ச்சி இன்று ஆரம்பமானது.இதில் கலந்து கொண்டவர்கள் விபரம்    ஸ்ரீ (மாநகரம் கதாநாயகன்)    அனுயா    வையாபுரி    ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்)    கஞ்சா கருப்பு    சினேகன்    ஓவியா    ரேசா    பரணி    காயத்ரி ரகுராம்    ஆர்த்தி கணேஷ்    ஜுலி (ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி)    கணேஷ் வெங்கட்ராம்    ஷக்தி வாசுதேவ்15வதாக நமீதா கலந்து கொண்டார். இவர் தன் மேல் இருக்கும் தவறான எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று இதில் கலந்து கொண்டுள்ளாராம்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்படாதவர்கள்தான்.ஜுலி என்ற பெண்ணை...

Read More

'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட ...

<
'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், முத்துக்கடையில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.  அதில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அந்தக் கூட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா குறித்து துரைமுருகன் பேசினார்.துரைமுருகன் பேசும் போது, "கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிகைகளைப் படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு, 'அண்ணாவைப் பிடிக்கும்' எனக் கூறுகிறார் கருணாநிதி. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமலிருப்பது சோகமாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்டுப்பாடு, அ.தி.மு.க-வில் தற்போது இல்லை" என்றார்.இதனிடையே, "ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?. அரசு செய்யும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம்" என்று ஸ்டாலின் பேசினார். ...

Read More

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும...

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் மட்டும் பொறுப்பல்ல. சுற்றமும் சூழலும்தான் என்பதை பக்காவான ஒரு காதல் கதையாகவும், பரிதாபமான ஒரு காட்டுக் கதையாகவும் சொல்ல நினைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய். படம் முடிந்தபின்பு எந்தெந்த காட்டிலிருந்து எத்தனையெத்தனை மலைவாழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட்டு, ஒரு சின்ன ‘ஷாக்’ கொடுக்கிறார் அவர். காட்டு பலாப்பழத்தை கையாலேயே உரித்து, கலகலப்பாக ஊட்டியதில் கமர்ஷியல் ருசியும் கலந்திருப்பதால் ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்…” அந்தமான் காட்டுப்பக்கம் விசிட் அடிக்கும் ஹீரோயின் சாயிஷா அண்டு பிரண்ட்ஸ் குரூப், தங்கள் காரில் அடிபட்டு விழும் காட்டுவாசி ஜெயம் ரவியை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவுகிறார்கள். காட்டைத் தவிர எதையும் கண்டிராத ரவி ஆஸ்பிடலையே துவம்சம் செய்ய… எப்படியோ மீண்டும் கொண்டு வந்து...

Read More

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என...

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என்னாச்சு? ஒரு காலத்துல கதையா சொல்லி அசத்துன டிஆர் மகன் அதையும் ஆம்லெட்டுன்னு நினைச்சு ஆசையா விழுங்குனாராம். போங்கய்யா… நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்!சிம்பு கால்ஷீட் கிடைச்சா போதும். வெறும் சட்டியில வித்தை காட்டிடலாம் என்று நினைத்த இப்படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை குறை சொல்வதா? நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா? அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா? மொத்தத்தில் சிம்புவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டில், மவுலிவாக்கமே விழுந்து மண்ணை மூடிய அதிர்ச்சி. ரசிகர்களின் ஆராதனையை சூடமாக நினைத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள...

Read More

“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா?” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் ...

<
“சரி… போட்டா போட்டுக்கட்டும்யா. தளபதின்னு போட்டா நம்ம தளபதியா அவரு ஆகிடுவாரா?” -இப்படி தளபதி மு.க.ஸ்டாலினின் பாசப்படையினர் சமாதானப்பட்டுக் கொண்டாலும், ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு கடுப்பாகிறார்களாம். அது என்ன? ஒரு கொடூரமான பிளாஷ்பேக். விஜய் நடித்த ஒரு படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் என்ன காரணத்தினாலோ அதை பல மாதங்கள் ரிலீஸ் செய்யாமலே வைத்திருந்தது.விஜய்யை தவிர அவர் சம்பந்தப்பட்ட எல்லாரும் சன் பிக்சர்ஸ்சின் வாசலில் ஏறி சாத்வீகமான முறையில் நீதி கேட்டார்கள். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஒரு நாள் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி அங்கிருந்த சன் பிக்சர்ஸ் இன்சார்ஜிடம், “தளபதி ரொம்ப பீல் பண்றாரு. படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்களேன்” என்று தொலைபேசி மூலம் கேட்க, எதிர்முனை இப்படி கேட்டதாம். “தளபதியா… யாரு? எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே தளபதிதான். அவர்தான் மு.க.ஸ்டாலின். நீங்க தளபதின்னு யாரை சொல்றீங்க?” என்று கேட்க, விஜய் அப்பா படு...

Read More

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை...

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் அரசியலும் இல்லை. சினிமாவும் இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை.ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு நடிகர்கள் குறி வைத்து ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த ரஜினியே எம்.ஜி.ஆரின் நாற்காலியை நிரப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞனை, போற்றுதலுக்குரிய மனிதாபிமானியை, கவுரவத்திற்குரிய அரசியல்வாதியை பற்றி அறியாத தகவல்களுடன் ஒரு படம் வந்தால், அந்த படத்தை எப்படியெல்லாம் தமிழ் சமூகம் கொண்டாடும்? அதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும்.காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அவரைப்போலவே உருவத் தோற்றமுள்ள ஒருவரை கொண்டுவந்து அவர் மூலம் இந்த நாட்டுக்கு படிக்காத மேதை பற்றி தெரியாத விஷயங்களை அறிய வைத்த ரமணா கம்யுனிகேஷன்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறது.நட்சத்திர தேர்வை ஆரம்பித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாராங்க?...

Read More

Search This Blog

Blog Archive

About