July 11, 2017
<
தமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் மற்றவரை குறை கூறிக்கொண்டே தான் இருக்கின்றனர். இதில் பலரின் இன்னொரு முகம் வெளிப்பட்டு வருகிறது.ஆர்த்தி முதல் நாளிலிருந்து அனைவரையும் வம்பிழுத்து வருகிறார். இதில் பெரும்பாலும் ஜுலியைத் தான் போலி, போலி என்று கூறி அழ வைத்து வந்தார். இதற்கு காயத்ரி சப்போர்ட் செய்து வந்தார்.இந்நிலையில் தற்போது எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆர்த்தி பேசும்போது, அனைவருமே தங்கள் உண்மையான குணாதிசயத்தை மறைத்து போலியாக நடிக்கிறார்கள். நானும் இவர்களை போல் போலியாக மாறிவிடுவேனோ என்று பயமாக உள்ளது என்றார்.மக்கள் ஓட்டளித்தால் நான் நானாக இருப்பேன் இல்லையென்றால் போலியான ஆர்த்தியாகத்தான் வெளியேறுவேன் என்று கூறினார்.இதனால் காயத்ரி, சினேகன் உட்பட மற்ற பங்கேற்பாளர்கள், ஓட்டு வாங்குவதற்காக மற்றவர்களை போலியாக நடிக்கிறார்கள் என ஆர்த்தி கூறுகிறார் என்று விமர்சித்துள்ளனர். ...
July 11, 2017
உலகிலேயே அதிகம் பேர் பார்த்த GANGNAM STYLE பாடலையே பின்னுக்கு தள்ளிய பாடல்- சாதனை தகர்க்கப்பட்டது
July 11, 2017PSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது. ஒரு...
PSY என்று அழைக்கப்படும் பாடகர் பாடிய GANGNAM STYLE பெரிய சென்சேஷ்னலை உருவாக்கியது. இப்பாடல் தான் முதன் முறையாக 100 கோடி ஹிட்ஸை கடந்தது.ஒரு சில நாள் வரை இந்த பாடல் தான் யு-டியூபில் அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இருந்து வந்தது, இந்த வீடியோவை 289.45 கோடி பேர் பார்த்துள்ளனர்.இந்த சாதனையை FF-7 படத்தில் பால் வாக்கர் மரணத்திற்காக ஒரு ஆல்பம் அமைக்கப்பட்டது, See You Again ft. Charlie Puth என்ற ஆல்பம் தற்போது 289.57 கோடி ஹிட்ஸை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளது.தற்போது இந்த வீடியோ தான் உலகிலேயே அதிகம் பேர் பார்த்த வீடியாவாக பெருமையை தன் வசம் கொண்டுள்ளது. ...
July 11, 2017
வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி
July 11, 2017பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும...
<
பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக இருக்கிறேன், என்னை பார்க்காமல் குழந்தைகளுக்கு உடல்நிலையே சரியில்லை.என்னை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர், மேலும், காலை முருகன் கோவிலுக்கு சென்றேன்.பலரும் வந்து என்னை நலம் விசாரித்தார்கள், சந்தோஷமாக இருந்தது, பிக்பாஸில் என்ன நடந்தது என்பது குறித்து 100 நாட்களுக்கு பேசக்கூடாது என்று கூறிவிட்டனர், அதனால் தற்போதைக்கு விடைபெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.100 நாட்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியே சொல்லக்கூடாது என்பது அக்ரீமெண்டில் இருக்க, அனுயா, கஞ்சா கருப்பு, ஸ்ரீ தற்போது பரணி வரை பேச மறுக்க, ஏதோ உள்ளே நடக்கின்றது என்றே ரசிகர்களுக்கு நினைக்க தோன்றும். ...
July 11, 2017
யாருக்கோ யூஸ் ஆகலாம்- டிடி யாரை தாக்கி சொன்னார் தெரியுமா?
July 11, 2017சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சமீப...
<
சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால், சமீப காலமாக இவர் தன் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கின்றார், இதற்கு ஆதரமாக பவர் பாண்டி படத்தில் இவரின் பெயரை செல்வி.திவ்யதர்ஷினி என்று தான் போட்டனர்.இந்நிலையில் கடந்த வாரம் விஜய் டிவியில் நடந்த நீயா நானா ஷோவின் பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் மனக்கஷ்டம் குறித்து பேசினார்கள்.அதன் சில பகுதிகளை டிடி ஷேர் செய்து ‘இவை யாருக்காவது யூஸ் ஆகலாம்’ என்று தெரிவித்திருந்தார், பலரும் தன் கணவரை தான் டிடி அப்படி சொல்கின்றார் என கூறி வருகின்றனர். ...
July 11, 2017
விரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்!
July 11, 2017ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இரு...
<
ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இருக்கும் இடத்தில் இருந்தபடியே பணம் அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவருவது தொடர்பாக, மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்துப்பேசினார். UPI (Unified Payments Interface) எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் அந்நிறுவனம் தனது அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவர உள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.பணம் பெறுபவரின் வங்கிக்கணக்கோடு பதிவுசெய்த மொபைல் எண் இருந்தாலே, அவருக்கு பணம் அனுப்பும்...
July 11, 2017
திரைப்படத்தை விஞ்சிய திடீர் திருப்பம்... பிரபல நடிகையின் வழக்கில் அடுத்த கைது யார்..?
July 11, 2017பிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்ட...
<
பிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது கேரளா காவல்துறை.இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. “பாதிக்கப்பட்ட நடிகையுடன் இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாகவே திலீப் இப்படி ஒரு செயலை அரங்கேற்றியிருக்கிறார். நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இப்போது திலீப்பைக் கைது செய்துள்ளோம்” என்கின்றனர் வழக்கை விசாரித்துவரும் போலீஸார். திலீப்பைக் கைது செய்யும் முன் அவரிடமும், அவரது நண்பரும், இயக்குநர்ருமான நதிர்ஷா ஆகியோரிடம் அலுவா போலீஸ் கடந்த ஜூன் 28-ம் தேதி 13 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். பிப்ரவரி 17-ம் தேதி இந்தப் பாலியல் தொல்லை சம்பவம் நடந்தது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் பல்சர் சுனி என்பவர் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரிடம்...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
July
(156)
-
▼
Jul 11
(6)
- அனைவருமே Fake தான் உளறிய ஆர்த்தி மீது கொந்தளித்த க...
- உலகிலேயே அதிகம் பேர் பார்த்த GANGNAM STYLE பாடலையே...
- வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி
- யாருக்கோ யூஸ் ஆகலாம்- டிடி யாரை தாக்கி சொன்னார் தெ...
- விரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்!
- திரைப்படத்தை விஞ்சிய திடீர் திருப்பம்... பிரபல நடி...
-
▼
Jul 11
(6)
-
▼
July
(156)