May 26, 2018
`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது
May 26, 2018<
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறலின்போது ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில், முதலில் மருத்துவர் சிவகுமாரிடமும், பின்னர் மருத்துவர் அர்ச்சனாவிடமும் ஜெயலலிதா பேசுகிறார். ஜெயலலிதா : oh sad...