November 14, 2016
எதையெல்லாம் முதலில் செய்தது ஆளவந்தான்?
November 14, 2016 நிச்சயம் கமல்ஹாசன் ஓர் விளங்க முடியாத படைப்பாளி தான். அவரின் படங்கள் ரிலீஸாகும் நேரங்களில், அப்படங்களை முதலில் புரிந்துகொள்வது கடினம் தான். ரிலீஸாகும் போது ரசிக்காத, ரசிகன், பலவருடங்களுக்குப் பின்பே, கொண்டாட ஆரம்பிக்கிறான். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்பவர் கமல். அடுத்தடுத்துப் படங்கள் தோல்வியடைந்தாலும் சரி, தன்னை நடிகனாக ரசிகன் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி, தன்னுடைய சோதனை முயற்சியை கைவிடாமல் மேற்கொண்டவர். அதில் கவனிக்க வேண்டிய படம் “ஆளவந்தான்”. இப்படம் சிலர் சிலாகித்திருக்கலாம். பலர் திட்டியும் இருக்கலாம். ஏன், கமலின் மீது கோவப்பட்டிருக்கலாம். ஆனாலும் ஆளவந்தான் நிச்சயம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அந்த பொக்கிஷம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையை கொண்ட படம் ஆளவந்தான். I am a Hero, I am a...