February 24, 2018
February 24, 2018
நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்- நடிகர்கள் கமல், ரஜினியின் இரங்கல்
February 24, 2018ஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக...
ஒட்டுமொத்த இந்திய சினிமாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி. இவர் தனது உறவினர் திருமண விழாவிற்காக துபாய் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இந்த செய்தி பிரபலங்களை தாண்டி ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மரணம் பற்றி அறிந்த கமல் மற்றும் ரஜினி டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
February 24, 2018
தனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா?
February 24, 2018தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி...
தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது.
அது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது.
அது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
February 24, 2018
கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்
February 24, 2018கலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத...
இத்தனைக்கும் இந்த படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இந்த மலையாளிகளால் கூட்டுச் சேர்ந்து படைத்திருக்கும் இந்த கேணி முழுக்க உண்மையின் பக்கம்- அதாவது – நம் தமிழர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கிறது என்பதுதான் ஸ்பெஷல் பிரமிப்பு .அதிலும்
தமிழகத்திற்கும், கேரளாவிற்குமான முல்லை பெரியாறு என்னும் மிக பிரமாண்டமான ஒரு அணை பிரச்னையை ஜஸ்ட் ஒரு கிணற்றை மையமாகக் கொண்டு அந்த கிணற்றுக்கும் ரெண்டு ஸ்டேட் போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் போட்டு கிணறுதான் அணை என்று சகலரையும் நினைக்க வைத்ததில் டபுள் புரொமோசன் வாங்கி விட்டார் இயக்குநர். குறிப்பாக வணிக ரீதியாக கல்லா பார்க்க வேண்டுமென்ற நோக்கில் இரட்டை அர்த்த வசனங்களோ, குத்துப்பாட்டோ இல்லாமல் பார்க்கத் தக்க வகையில் வழங்கி இருப்பதும் சிறப்பு.
படத்தில் கதை என்னவென்றால் தண்ணீருக்காக போராடிய இந்திரா என்ற கேரக்டர்தான் மெயின். கேரளாவில் ஹானஸ்டான அரசு அதிகாரியின் மனைவியான இந்த இந்திரா என்ற பெயரிலான ஜெயப்பிரதா,தன் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து காலமாகி விட்ட நிலையில் அவரின் கடைசி ஆசையான தமிழகத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன் ஒருவனின் இளம் மனைவியும் வருகிறார். வந்து தங்கிய கிராமத்தில் தனக்கான இடத்தில் இருந்த ஒரு கேணியும் அதற்கு பின்னால் வியாபித்திருக்கும் எல்லைப் பிரச்சினையுடன் கூடிய அரசியல் சூழ்ச்சியும் தெரிய வருகிறது. அதே சமயம் அந்தக் கிராம மக்கள் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் நொந்து போயிருக்கும் சூழலில் தனக்கு சொந்தமான கேணியிலுள்ள வற்றாத நீர்வளத்தை ஊர் மக்களுக்காக வழங்க முடிவெடுத்து போராடுவதே கதை.
ஆனால் ரொம்ப சிம்பிளான அதே சமயம் ஸ்பெஷலான இந்த இந்திராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் மூன்று ரிப்போர்ட்டர்கள், அவர்களுக்கு இந்திராவின் கதையை சொல்ல மூன்று கேரக்டர்கள், அவர்களுக்கு துணை, இணையாக சில பலர் என்று அதிகப்படியான ஆட்களால் சொல்ல வந்த மெயினான திரைக்கதை அமுங்கி போனதுடன் படத்தின் நீளமும் அதிகரித்து ஆயாசம் ஏற்படுத்துகிறது..
இத்தனைக்கும் நம்மால் இன்னும் மறக்க இயலாத கோமல் & பாலசந்தர் கூட்டணியில் வந்த ‘தண்ணீர் .. தண்ணீர்’ தொடங்கி அண்மையில் நயன்தாரா & கோபி வழங்கிய ‘அறம்’ வரையிலான பல படங்களில் சொன்ன, அலசிய சமாச்சாரம்தான். ஆனால் இன்றளவும் சர்ச்சைக்குரிய – அதிலும் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையை சொல்வதால்தான் இந்த கேணி எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறது. அதிலும் நடப்பு அரசியலை அலசும் தாஸ் ராம் பாலாவின் வசனங்கள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.
“ராக்கெட் விடுறோம், ஏவுகணை தயாரிக்கிறோம்.. ஆனா இன்னும் மனுஷன் பேண்டதை மனுஷன் தானே அள்ளிட்ருக்கான்.. அதை என்னைக்காவது பேசியிருக்கோமோ?”
“நடிகை குழந்தை பெத்துகிட்டா அவ புருஷன் சந்தோஷப் படாம பக்கத்து வீட்டுக் காரனாடா சந்தோஷப்படுவான்.. அதையெல்லாம் செய்தியாக்குறீங்க?”
“10 நடிகன், 20 அரசியல்வாதி, 30 விளையாட்டு வீரன் இவனுங்க 50 பேர் மட்டுமா இந்தியா?, 125 கோடி பேர் இருக்கான்.. அவனுங்களையும் பாருங்க”
”கேரளா தண்ணியிலே தமிழ்நாட்டு பருப்பு வேகாது..”
என்பது போன்ற வசனங்களுக்கு கை தட்டாத ரசிகன் கிடையாது. அதற்காக ஆரம்பத்தில் பல சீன்களில் முழு வசனத்தையும் மலையாளத்தில் பேச வைத்து கடுப்பேற்றி விடுகிரார்கள்
அது மட்டுமின்றி ஊர் எல்லையில் டீ கடையில் வெட்டியாக இருக்கும் சாம் கேரக்டர், அங்கு டீ குடிக்க வரும் லாரி டிரைவர் எல்லாம் நக்கல்தனமாகவும், அதிகபிரசங்கிதனமாகவும் பேசும் வசனம் சலிப்பை தருகிறது. அத்துடன் ஊர் பெரிசாக வரும் பார்த்திபன் ரோல் வேஸ்ட். ஆ..ஊ-ன்னா கூட்டத்தில் வந்து தமிழனுக்கு ஆதரவாக டயலாக் மட்டும் பேசி போகிறார். அப்புறம்.. ஜெயபிரதா -வுடன் கிராமத்திற்கு அழைத்து வரும் பார்வதி நம்பியார் ரோல் எதற்கு என்றே புரிபடவில்லை.
நௌஷாத் ஷெரிப்,ஒளிப்பதிவு. படத்திற்கு பெரும்பலம். ஜெயச்சந்திரன் இசை இனிமை. “அய்யா சாமி” பாடலும், “கலையும் மேகமே”பாடலும் படத்தோடு பார்க்கும் போது நன்றாகவே இருந்தது..விக்ரம் வேதா” சாம்.சி.எஸ் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் எடிட்டர் ராஜா முகமது-தான் தயவு தாட்சண்யம் இல்லாமல் தன் பணியை செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. இந்தப் படத்திற்கு தேவையானதை மட்டும் அனுமத்தித்து இருந்தால் ஷார்ட் & ஷார்ப்-பாக இருந்திருக்கும்.
ஆனாலும் கையில் எடுத்த இரு முனை ஆயுதத்தை மிக நேர்த்தியாக கையாண்ட கேணி டீமுக்கு ஸ்பெஷல் பொக்கே..
மொத்தத்தில் கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்
February 24, 2018
தன்னை திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு இப்படி ஒரு டாக்ஸ் வைத்துவிட்டாரே ஆர்யா- சோகத்தில் போட்டியாளர்கள்
February 24, 2018ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக தனக்கு பெண் கிடைக்காமல் இருப்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். இந்நிலையி...
ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக தனக்கு பெண் கிடைக்காமல் இருப்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது ஒரு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகின்றார், இதில் தன்னை திருமணம் செய்ய எந்த பெண் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம், என்னை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று ஆர்யா கூறியுள்ளார்.
இதனால் தினமும் அவர்கள் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர், ஆர்யா தீவிர சைக்கிளிங் பிரியர், அனைத்து போட்டியாளர்களையும் ராஜஸ்தானில் சைக்கிளிங் அழைத்து சென்றுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் போட்டியாளர்களும் ஆர்யாவுடன் சைக்கிளிங் சென்றுள்ளனர், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பரபரப்பை அடைவது குறிப்பிடத்தக்கது.
Episode 4 My fav Cycling 😍😍😍😍 #Mysoulmate @ColorsTvTamil @justvoot #NipponPaintEVM pic.twitter.com/M0LjgwDMky— Arya (@arya_offl) February 23, 2018
இந்நிலையில் இவர் தற்போது ஒரு பிரபல சேனலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகின்றார், இதில் தன்னை திருமணம் செய்ய எந்த பெண் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம், என்னை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று ஆர்யா கூறியுள்ளார்.
இதனால் தினமும் அவர்கள் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர், ஆர்யா தீவிர சைக்கிளிங் பிரியர், அனைத்து போட்டியாளர்களையும் ராஜஸ்தானில் சைக்கிளிங் அழைத்து சென்றுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் போட்டியாளர்களும் ஆர்யாவுடன் சைக்கிளிங் சென்றுள்ளனர், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பரபரப்பை அடைவது குறிப்பிடத்தக்கது.
Episode 4 My fav Cycling 😍😍😍😍 #Mysoulmate @ColorsTvTamil @justvoot #NipponPaintEVM pic.twitter.com/M0LjgwDMky— Arya (@arya_offl) February 23, 2018
February 24, 2018
கோடிகளை குவித்த ‘Black Panther’- இத்தனை கோடிகள் வசூலா!
February 24, 2018ஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வெல் காமிக்ஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘Black Panther’ ரசிகர்...
ஹாலிவுட்டை பொறுத்தவரை மார்வெல் காமிக்ஸ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘Black Panther’ ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் வெளிவந்த 10 நாட்களில் 500 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 380 மில்லியன் டாலர் வசூல் செய்ய, இந்தியாவில் 6 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.
மேலும், இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் ரூ 3215 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் வெளிவந்த 10 நாட்களில் 500 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 380 மில்லியன் டாலர் வசூல் செய்ய, இந்தியாவில் 6 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.
மேலும், இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் ரூ 3215 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
February
(61)
-
▼
Feb 24
(6)
- இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ - புக...
- நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்- நடிகர்கள் கமல், ர...
- தனுஷ் விட்டுக்கொடுத்தாரா, இல்லை அது தான் இதுவா?
- கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்
- தன்னை திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு இப்படி ஒரு ட...
- கோடிகளை குவித்த ‘Black Panther’- இத்தனை கோடிகள் வச...
-
▼
Feb 24
(6)
-
▼
February
(61)