March 23, 2018
'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial
March 23, 2018<
திரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...டி எம் சௌந்தரராஜன்11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத்...