October 30, 2016
உலக சிக்கன நாள் + உண்டியல் பன்றி மாடலில் இருப்பது ஏன்?
October 30, 2016 சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய தேவையை மறுப்பதாகும். அது சரி நாமோ அல்லது நம் குழந்தைகளோ காசு சேர்க்க உண்டியலைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? இப்படி ல் குழந்தைகள் காசு சேர்க்க ஃபாரீன்களே ‘பிக்கி பேங்க்’ என்றழைக்கப்படும் பன்றி வடிவ உண்டியலையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்களே, அது ஏன்னு தெரியுமோ? அதற்கு சுவையான பின்ன?ணி இருக்கிறது. அத்துடன் இந்த உலக சேமிப்பு நாள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள ஆர்மிருக்குதானே?...